Tuesday, October 5, 2010

பிருந்தாவனம்

brindavanam

  1. குளிப்பாட்டிய உடம்பை இரண்டு துண்டு கொண்டு துடைப்பார்கள். 
  2. பின்னர் ஸ்தூல உடலுக்கு உடம்பெங்கும் விபூதி அள்ளிப் பூசுவார்கள்.
  3. கழுத்தை இறுகச் சுற்றி ஒரு ருத்ராக்ஷ மாலையை அணிவிப்பார்கள்.
  4. இந்தச் சடங்கு இங்கே நடக்கும் போது தேர்ந்தெடுத்த இடத்தில் வட்டமாகவோ அல்லது சதுரமாகவோ ஒரு பள்ளம் தோண்டுவார்கள்.
  5. மூங்கிலில் நாற்காலி போன்ற பல்லக்கு ஒன்றை செய்து நான்கு பிராமணர்கள் உடலை அதில் உட்கார வைத்து தூக்கிச் செல்வார்கள்.
  6. தோண்டிய பள்ளம் முழுக்க "கல் உப்பு" போட்டு நிரப்புவார்கள்.
  7. அந்த உப்பு நிரப்பிய பள்ளத்தில் சடலத்தை கழுத்துவரை புதைப்பார்கள்.
  8. உப்பை தலையோடு சேர்த்து அணைத்து தொய்யாத வண்ணம் நேராக வைப்பார்கள்.
  9. உரித்த தேங்காய் கொண்டு அந்த தலை பிளக்கும் வரையில் அதன் மேல் தொடர்ந்து சிதறு அடிப்பார்கள்.
  10. கபாலம் திறந்ததும், முழு உடலையும் உப்பு கொண்டு நிறைத்து பள்ளத்தை மூடிவிடுவார்கள்.
  11. மூடிய பள்ளத்தின் மேல் செங்கல் வைத்து காரை பூசி சதுரமாகவோ வட்டமாகவோ பள்ளத்திற்கு தகுந்தாற்ப்போல் ஐந்தாறு அடிக்கு ஒரு மாடம் எழுப்புவார்கள்.
  12. அதன் மேல் துளசிச் செடி வளர்த்து அகல் தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.

வி. ஸ்ரீராம் எழுதிய The Devadasi and the Saint என்ற புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு சந்நியாசி முக்தி அடைந்தவுடன் எழுப்பப்படும் பிருந்தாவனம் அமைப்பது பற்றிய சடங்கை/நிகழ்வை இவ்வாறு விவரித்திருக்கிறார். இதுபோலத்தான் திருவையாற்றில் தியாகராஜருக்கும் பிருந்தாவனம் கட்டப்பட்டது என்று குறிப்பு கொடுத்திருக்கிறார்.

படஉதவி: empireslastcasualty.blogspot.com

28 comments:

அப்பாதுரை said...

யம்மோவ்!

இளங்கோ said...

எல்லாம் ஓகே, அந்த தேங்காய் விசயம்தான் என்னவோ போல இருக்கிறது.

RVS said...

எனக்கும் அப்படித்தான் இருந்தது அப்பா சார்! எழுதும் போது தலையை ரெண்டு தடவை தடவிக் கொண்டேன்.

RVS said...

இளங்கோ... அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். உள்ளது உள்ளபடியே பதிவு செய்தேன்.

bogan said...

தேங்காய் விவகாரத்தின் காரணம்..ஞாநிகளுக்கேல்லாம் பிராணன் சிரசின் உச்சியில் உள்ள பிரமரந்திரம் என்ற துளை வழியாகத்தான் பிரியும் என்று நம்பிக்கை உண்டு.அப்படி இல்லை என்றால் ஞானி இல்லை என்று யாரும் சொல்லிவிடக் கூடாதே!அதனால் செயற்கையாய் தலையில் ஒரு உடைப்பை ஏற்படுத்தி பார்ட்டியை முக்தி அடைய வைக்கிறார்கள்!

RVS said...

நன்றி போகன். இறப்பதற்கு முன்னரே தலையில் அடிப்பார்கள் என்று அண்டர்வேர் வயசில் கேள்விப்பட்டு விட்டு அன்று இரவு பயந்து முழித்துக்கொண்டு உச்சா போகக் கூட வெளியே வராமல் படுத்திருக்கிறேன். "தேங்காயை அடிச்சு...மண்டையை பிளந்து.....கொட கொடன்னு ரத்தம் கொட்டி..." என்று குரல் ஏற்றத்தாழ்வுகளுடன் கதை சொன்ன
அந்தக் கதைசொல்லியின் தாக்கம் ஏற்ப்படுத்திய விளைவு அது.

பத்மநாபன் said...

தீராத விளையாட்டு பிள்ளைக்கு பிருந்தாவன் கார்டனில் தானே வேலை ? பிருந்தாவனத்தில் என்ன வேலை...

சரி படிக்க ஆரம்பித்து வீட்டீர்கள்...ஜீவ சமாதி பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது பற்றியும் ஒரு புள்ளட் பாய்ண்ட் பதிவு இடுங்கள்....

RVS said...

ஆகட்டும்... உத்தரவு பத்து ஐயா.. ஜலசமாதி பற்றியும் படித்துள்ளேன்... விரைவில் பத்துஜி விருப்பம்..

ஹேமா said...

கடவுளே...என்ன சொல்லன்னு தெரில.இதெல்லாம் ஏன்?மூடநம்பிக்கைகள் என்கிறதுக்குள்ள இந்த விஷயமும் அடங்குமா ஆர்.வி.எஸ்?

RVS said...

ஹேமா. நம்பிக்கை, மூட நம்பிக்கை, அவநம்பிக்கை, தன்னம்பிக்கை எல்லாமே ஒரு பிரிவின் அல்லது ஒரு தனிப்பட்டவரின் மனம் சார்ந்தது. மற்றவர்களுக்கு தீங்கு நேராத வரையில்(அதாவது உடலாலும் உள்ளத்தாலும் காயம் ஏற்படாத வரையில்..) செய்யும் எந்த காரியமும் மூட நம்பிக்கை கிடையாது என்ற கட்சியை சேர்ந்தவன் நான். ஆடு வெட்டுவதை கூட Ecological Balance என்று எடுத்துக் கொள்கிறவர்களும் உண்டு. முடிவில், எந்த சடங்குமே உயிரோடு இருப்பவர்களின் திருப்த்திக்காக செய்யப்படுவது. சர்வ ஜன சுகினோ பவந்து. ;-) ;-)

சைவகொத்துப்பரோட்டா said...

டெரர்ரா இருக்கே!

Aathira mullai said...

பல அறிய தகவல்கள் இத்தளத்தில். இது அதற்குச் சிகரம்..நன்றி RVS

RVS said...

டெர்ரரா... பின்னூட்டத்தில் என்னோட சின்ன வயசு அனுபவத்தை படிச்சீங்கல்ல சை.கொ.ப

RVS said...

நன்றி ஆதிரா..

மோகன்ஜி said...

ஆர்.வீ.எஸ்,பதிவை படிச்சிட்டு "பிருந்தாவனமும் நொந்த குமாரனும்"னு பாடிகிட்டு திரியறேன்.
கொஞ்சம் வெறுத்து சன்யாசி ஆகிடலாம்னு தோணிக்கிட்டு இருக்கு. அது கஷ்டமா இருக்கும் போல இருக்கே!

RVS said...

மோகன்ஜி அண்ணா.. நீங்க சன்யாசியா போய்ட்டா நாங்க என்ன ஆவோம். எனக்கு ரொம்ப நாளா சிதற காய் அடிக்கணும் போல ஆசையா இருக்கு.. ;-)

எஸ்.கே said...

அறியாத தகவல்கள்! நன்றி!

RVS said...

ஒ.கே எஸ்.கே ;-)

Madhavan Srinivasagopalan said...

இதுல இம்புட்டு மேட்டரு இருக்குதா?

பத்மநாபன் said...

ஆர் .வி .எஸ் ... நான் கேட்டது ஜீவ ....ஜீவ சமாதி ... ஜஸ்ட் ஜல சமாதின்னு பெயர் கேட்டவுடன் வாத்தியார் எழுதிய சின்ன வயசு அனுபவங்கள் கட்டுரை ஒன்று ஞாபகம் வந்தது ... நீங்க படிச்சிருப்பீங்க...

suneel krishnan said...

நல்ல பகிர்வு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இந்த மாறி நெறைய பாத்துருக்கேன் . இதுல இவளவு விஷயம் இருக்கா ?

RVS said...

மாதவா சின்ன வயசில் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். இந்த புக்க படிச்சா நமக்கே கபாலம் திறந்திடும் போலிருக்கு... ;-)

RVS said...

பத்துஜி ... கொஞ்சம் கோடுபோட்டு காமிங்க... ரோடு போட்டு பார்க்கறேன்...

RVS said...

ஆமாம் டாக்டர். என்ன ரொம்ப நாளா காணோம்?

அப்பாதுரை said...

//"பிருந்தாவனமும் நொந்த குமாரனும்"னு பாடிகிட்டு திரியறேன்.

அட! இந்தப் போடு போடுறிங்களே மோகன்ஜி?

arvind said...

now, you have to tell us whats the connection between brain, wisdom and tulsi! this post is fine. many others are mokkai. you need to go to the next level my friend. comedy panratha vittutu, explore your language and literary talent :(

பத்மநாபன் said...

கோடுதானே போட்டறலாம்.... ஆனா ஜீவ சமாதி இப்ப சட்டவிரோதமாமே.....சித்தர் கால வழக்கம் அது....கொங்கணர் எனும் சித்தர் திருப்பதியிலும் ,போகர் பழனியிலும் ஜிவ சமாதி அடந்ததாக சொல்கிறார்கள்...

RVS said...

ஆமாம். ரைட்டு.
கொஞ்ச நாள் கழிச்சு இந்த சப்ஜெக்ட் எடுப்போம் பத்துஜி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails