Monday, October 18, 2010

மன்னார்குடி டேஸ்


ஆர்.கே நாராயணின் 'மால்குடி டேஸ்' மாதிரி எனக்கும் 'மன்னார்குடி டேஸ்' அப்படின்னு என் சொந்த வூர்ப்புராணம் எழுதனும்னு ஆர்வபடுத்தி உசுப்பிவிட்டது என்னோட ஆபீஸ் தான். ஆங். தோ பார்டா. உனக்கு என்ன தெகிரியம். நேத்து ஆனா ஆவன்னா படிச்சவன்லாம் எழுத வன்ட்டாம்ப்பா. நான் இப்படி தமிழ்க் கொலை செய்யறது என்னோட ஹை ஸ்கூல் தமிழ் பண்டிட் ஸ்வாமிநாதனுக்கு தெரிந்தால் அவர் நிச்சயம் தமிழ் சொல்லிக்கொடுக்கறதுக்கு ஒரு முழுக்கு போட்டுவிட்டு பிராணஹத்தி பண்ணிப்பார். ரவி, ஜெகன் போன்ற ஆபீஸ் நண்பர்கள், உணவு இடைவேளைகளில் நான் கொடுத்த ஊர் 'டார்ச்ச்ச்.....சர்' தாங்காமல் எழுத என்னை உசுப்பேத்திவிட்டதால் உங்களை ரணகளமாக்க வந்திருக்கிறேன். எல்லாப் புகழும் ஏத்தி விட்டவர்களுக்கே!

அ. முத்துலிங்கம் தன்னுடைய லோகாயத வாழ்க்கை அனுபவங்களை தொகுத்த புத்தகத்திற்கு "உண்மை கலந்த நாட்குறிப்புகள்" என்று பெயர் சூட்டியிருப்பார். நம்ம வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளில் நடந்ததை அப்படியே எழுதினா உப்புசப்பில்லாமல் இருக்கும் என்று சொல்லி அதனால் அதில் கொஞ்சம் கற்பனையும் தட்டிப் போட்டு எழுதியிருப்பார். அதுபோல, இந்த மன்னார்குடி டேஸ் நினைவிலும் கண் மூடி கனவிலும் நான் பார்த்த நாட்கள். அதனால் இதைப் படித்துவிட்டு "டேய்.. ஆர்.வி.எஸ்... பாவி..இப்படி எழுதிப்புட்டியே டா... நீ நல்லா இருப்பியா.. என் பாவம் உன்னை சும்மா விடாது...ஏழேழு ஜென்மத்துக்கும் நீ மவுன்ட் ரோடு மாநாட்டு ட்ராஃபிக்ல சிக்கி சின்னபின்னாமாகி சீரழிஞ்சி போய்டுவே.. ஆட்டோகாரன் உன் வண்டி பூரா கோடு போட.. சிக்னலுக்கு சிக்னல் நீ போலீசுக்கு கப்பம் கட்ட.. " என்று சம்பந்தப்பட்டவர்கள் வாய்க்குவந்தபடி சபிக்காதீர்கள். பேண்டை ஸ்டான்ட்டாக்கி முதுகில் அருவாள் சொருகி வெட்ட துரத்தாதீர்கள். பிடித்தால் ஓ.கே. பிடிக்கவில்லை என்றால் "யப்பா சாமி... உன் திக்குக்கு ஒரு கும்பிடு" என்று ஒன்று பெரிதாய்ப் போட்டுவிட்டு வேறுபக்கம் ஓடிவிடுங்கள். தொல்லையின் எல்லை வெகு தூரத்தில் இல்லை. ஜாக்கிரதை!!!

madhilபொதுவாக யாருக்குமே தன்னோட 'இளமை' காலங்கள் பற்றிய நினைப்பு 'ஆட்டோகிராஃப்' சேரன் போல மனசுக்குள்ளயே 'சைக்கிள்'  சுத்திக்கிட்டு இருக்கும். ஆனா அதை லெக்ஷ்மி மாதிரி அசை போட நேரமோ (லெக்ஷ்மி என்பது ஊரில் என்னோடு சேர்த்து என் பெற்றோர் வளர்த்த பசு மாடு என்று அறிக.) அல்லது பல பழைய கருப்பு வெள்ளை சினிமாக்களில் வருகிற மாதிரி "டி...டி...டி...ர்.ர்.ர்..ரி.ங்.." என்று சவுண்ட் விட்டு 'கொசுவர்த்தி ஃபிளாஷ்பேக்'  ஓட்டி பார்க்கவோ நம்மில் பலருக்கு நேரம் இருக்காது. 

அடிக்கடி என்னுடைய நினைவுகளில் வரும் நான் பம்பரமாயும், கோலியாயும், கிரிக்கெட்டாயும் ஓடியாடிய என்னோட நகரமும், பிஞ்சிலிந்து பழுக்கும் வரை நான் சென்ற ஸ்கூல், டைப் இன்ஸ்டிடுயூட்,  கல்லூரி போன்ற சர்வ கலாசாலைகளும், கிரிக்கெட் மட்டையை பின்னால் சைக்கிள் காரியாரில் செறிகிக்கொண்டு கவாஸ்கர், கபில்தேவ்,ஸ்ரீகாந்த் ஆகும் கனவுடன் சுற்றிய வீதிகளும், மதிலழகு கொண்ட கோவிலில் வீற்றிருக்கும் ராஜகோபாலனின் மோகினி அவதாரப் புன்னகைகளும், மூடு பனி நிறைந்த மார்கழி மாதங்களில் 'எம்பாவாய்' என்று மட்டும் கூட்டத்தோடு கரைந்து சுடச்சுட வெண் பொங்கல் வாங்கி தின்ற வடக்குத்தெரு ராமர் கோவிலும்.................

இரவு பகல் பாராமல் எங்கள் பாரத்தை கூண்டோடு தாங்கிய வடக்குத்தெரு குட்டிச் சுவர் மதிலும், அப்பு, ஸ்ரீதர், ஸ்ரீராம்கள், உப்பிலி, கோபால்கள், சரவணன், அசோக், கோபிலி, மற்றும் பலரும் (பெண்கள் பெயர்களை எழுதக்கூட என் கீபோர்டுக்கு நாணமாகையால் எழுதவில்லை), எம்.சி.ஏ படிக்கும்போதே 'c ஒரு sea' என்று நான் Kernighan and Ritchie போல பலருக்கு  போதித்த பிட்ஸ் கம்ப்யூட்டர் சென்டரும், ஸ்ரீ ராம பிரானின் பர்த் டே(ஸ்ரீராமநவமி) கலக்க்ஷனும் கொண்டாட்டமும்,  ரவி சார் வீடும்('காக்காஸ் பார்'), இளவயதில் எனக்கு கணக்கு பண்ண (Maths tuition) சொல்லிகொடுத்த ராதா கண்ணன் மாஸ்டரும், 'வயதுக்கு' வரவைத்த லக்ஷ்மி  தியேட்டர் 'காலை' காட்சிகளும், பெரிய கோவிலின் பங்குனி பெருவிழாவும் அதன் விடையாற்றி கலை நிகழ்ச்சிகளும்....................

எல்லா சம்மரிலும் வாய்க்கால் வரப்பு கிரவுண்டு என்று கிடைத்த இடத்தில் எல்லாம் வஞ்சனை இல்லாமல் நடக்கும் கிரிக்கெட் டோர்ணமென்ட் திருவிழாக்களும், சேரங்குளம் மாமாக்களுடன் விளையாடிய சங்கராந்தி பண்டிகை கால கிரிக்கெட் தொடர் போட்டிகளும், எனக்கு பந்து போடவும், மட்டை பிடிக்கவும் கற்று கொடுத்த  ராமு சாரும், பெரிய கோயில் மேலை கோபுரவாசலில் விளையாடிய தெற்கு வீதி ரப்பர் பால் மாட்ச்களும், இன்னும் பல '...களும்' என்னுடைய இன்பக் கனாக்களில் ஓயாமல் கொடுத்த இன்னலினால், ஜெகத்தீரே! தயாராக இருங்கள். இது என்னுடைய 'கன்னி' முயற்சி. இந்த கன்னி முயற்சியை கனியாக்கும் ஆவலுடனும், அடியேனுடைய Nostalgia நாஸ்தியாக இல்லாமல் டேஸ்டியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தும்பிகையானை துதித்து ஆரம்பிக்கிறேன். பொறுத்தருள்க!!

நாளை முதல் கதைகள்.....


(அப்பாடி! ஒருவழியா முன்னுரையை முடிச்சாம்ப்பா என்று பல பேர் விட்ட பெருமூச்சு "புஸ்... புஸ்..." என்று நல்லபாம்பு கணக்காக என் காதில் சீறுகிறது)

ஃபோட்டோ குறிப்புகள்:  மேலே நீங்கள் அண்ணாந்து பார்த்தது எங்களூர் பெரிய கோவில். ஸ்ரீவித்யா ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில்.  இரண்டாவது படத்தில் குளத்தோர கோவில்(ராமர் கோவில்) பக்கத்தில் இருக்கும் அந்த பெரிய வேப்பமரத்தின் நிழலில் உள்ளது தான் அந்த சரித்திரப் புகழ் வாய்ந்த நாங்கள் ராப்பகல் அகோராத்திரியாக அரட்டை அடித்த மதில் கட்டை.

73 comments:

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆஹா சூப்பர்.. கலக்குங்க ஆர்.வி.எஸ்.. முன்னுரையே அமர்க்களமா இருக்கு.. நம்மூர் பெருமைய தொடர்ந்து சொல்லுங்க. வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்கு சார் உங்கள் கொசுவத்தி சுருள்

RVS said...

நன்றி புவனேஸ்வரி ராமநாதன். நிறைய இருக்கு சொல்றதுக்கு... யாரும் அடிக்க வராம இருந்த சரி.. ;-) ;-)

RVS said...

அமைச்சரோட முதல் வருகைக்கு ஒரு வணக்கம். பாராட்டுக்கு நன்றி. ;-)

PB Raj said...

RVS நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,

நானும் மன்னர்குடிதான்

RVS said...

வாங்க ராயல் ராஜ் (பெயரில் மட்டும்)!! ஏதேது நம்ம ஊர் ஆட்கள் ரொம்ப பேர் இருப்பாங்க போலிருக்கே.. அப்பப்ப வந்து போங்க.. ;-) ;-)

பொன் மாலை பொழுது said...

அம்பி, ஜாக்கிரதை! ஆர்.கே நாராயணின் 'மால்குடி டேஸ்' கதைகளில் வருவது போல், அந்து ஊர் போஸ்ட் மாஸ்டர் பொண்ணு யாரு கூடவோ ஓடிப்போயடுவா தேரியுமோன்னோ!? அந்த மாதிரி எதுவும் ஆகாம பாத்துக்கணும். சரியா? சமதுண்ணா!!

கும்மோணம் - நாகபட்டினம் பஸ்ஸில் போயிட்டு வரும்போதெல்லாம் உங்க ஊர் வழியாகத்தானே போவும்.அப்போது பஸ்சிலிருந்து பார்த்தாக்கா உங்க ஊர் கோவிலும், குளமும் பிரமிப்பை உண்டாகும். காலத்தின் கோலம் இன்னக்கி மனார்குடி நா மாபியா ஜாபகம்தான் வர்றது. கலிகாலமொன்னோ?!

சைவகொத்துப்பரோட்டா said...

ஆரம்பிங்க கதையை :))

மன்னார்குடி said...

வாழ்த்துக்கள் RVS.

Ravichandran Somu said...

RVS,

நம்ம ஊர் கதைகளை எழுதி கலக்குங்க... படிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

//மட்டை பிடிக்கவும் கற்று கொடுத்த ராமு சாரும்//

தாங்கள் படித்தது NHSS என்று நினைக்கிறேன். +2 எந்த வருடம்?

ராமு சாரின் கிரிக்கெட் மேட்ச் வர்ணணைகளை மறக்க முடியாது. Nostalgic memories!

வாழ்த்துகள்!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

RVS said...

கக்குண்ணா எதைக்கண்டும் விசனப்படாதீங்கோ... கதையைப்படித்து இன்புறுங்கள்... போஸ்ட் மாஸ்டர் பொண்ணு எதுவும் இல்லை. ஆனா லவ் போஸ்ட் கொடுத்த பொண்ணுங்க நிறையா இருக்கு.... பார்க்கலாம். அடி வாங்காமல் எப்படி எழுதுவது என்று முயற்சி செய்கிறேன்.

RVS said...

ஆ-"ரம்பிக்கிறேன்" சை.கொ.ப

Madhavan Srinivasagopalan said...

கேளம்பிட்டீயா... சரி.. சரி.. பட்டைய கெளப்பு மாமூ.
அடி.. இனி தூள் தான்.. நல்லா பொழுது போகும்.. நா ஒங்கள ஒட்டுறதும்.. நீங்க என்னைய ஒட்டுறதும்..

Anonymous said...

அண்ணா ஆரம்பமே அட்டகாசம்..
ட்ரையல் பாலிலேயே சிக்ஸர் அடிச்சுட்டீங்க.. இனி மேட்ச் புல்லா வானவேடிக்கை தான?

RVS said...

வாழ்த்துக்கு நன்றி என் சொந்த மண்ணே...

RVS said...

ரவி, கிரிக்கெட் கதைகளே ஒரு நூறு இருக்கும். ராமு சாரின் கிரிக்கெட் "வர்ணனைகள்" ஞாபகம் வைத்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். மெயில் ஐ.டி தெரியப்படுத்தவும். அதுல வச்சுக்கலாம் மீதி கச்சேரியை. நன்றி.

RVS said...

மாதவா... டீடைல் கேக்காம மாட்ச் பாரு.. ;-) ;-) இல்லைனா மெயில் அனுப்புப்பா... எல்லாருக்கும் நேரே மானத்தை வாங்கிடாதே...நன்றி.

RVS said...

பாலாஜி நிறைய 20-20 இருக்கும். சிலது டெஸ்ட் மாட்ச் மாதிரி இருக்கும். ஃபுல் மாட்ச் பார்க்கணும். சரியா.. ;-) ;-)

எஸ்.கே said...

இனிமையான நினைவுகள் தொடரட்டும்!

RVS said...

நன்றி எஸ்.கே. ;-)

அமைதி அப்பா said...

தொடருங்கள், தொடர்கிறோம்....

RVS said...

வாங்க அமைதி அப்பா... ;-) ;-) ;-)

Unknown said...

வாழ்த்துக்கள்!

//இளவயதில் எனக்கு கணக்கு பண்ண (Maths tuition) சொல்லிகொடுத்த ராதா கண்ணன் மாஸ்டரும்//

நானும் அவர்கிட்டே படிச்சுருக்கேன் :)
நல்ல கணக்கு வாத்தியார் என்பதைத் தவிர்த்து, ஒரு நல்ல மனிதர் மற்றும் விவசாயி! அவர் கஷ்டகாலம், நமக்குதான் கணக்கு ஏறல :)

RVS said...

அண்ணா தஞ்சாவூரான்......யாருன்னா நீங்க... ராதா கண்ணன் மாஸ்டர் கிட்ட படிச்சீங்களா.. கிட்ட வந்துட்டீங்களே... எந்த வருஷம்... பாதி நாள் வயலுக்கு போய் தான் டியூஷன் சென்டருக்கு கூட்டிகிட்டு வருவோம். அவர் பங்கு தாண்டி தான் நாங்களும் வச்சிருந்தோம்.
கணக்கில் முட்டை எடுத்த ஆட்களை எல்லாம்... முன்னாடி ஒரு முட்டையும், அதுக்கு முன்னாடி ஒரு ஒன்னும் போட்டு மார்க் எடுக்க வைத்த மாமனிதர். இப்பவும் ஊருக்கு சென்றால் அவரை பார்க்காமல் வருவதில்லை.

Ravichandran Somu said...

//நானும் அவர்கிட்டே படிச்சுருக்கேன் :)
நல்ல கணக்கு வாத்தியார் என்பதைத் தவிர்த்து, ஒரு நல்ல மனிதர் மற்றும் விவசாயி! அவர் கஷ்டகாலம், நமக்குதான் கணக்கு ஏறல ://

மன்னார்குடி பேரை பார்த்துட்டு பரவாக்கோட்டைகாரரும் வந்துட்டார்:)

RVS said...

எனக்கு பரவாக்கோட்டையில ரவி அப்படின்னு ஒரு நண்பன் இருந்தானே.... ;-)

ஸ்ரீராம். said...

கச்சேரி ஆரம்பம்...?!! கொளுத்திப் போடுங்க...கலக்குங்க...பெரிய ஜமா வேற சேரும் போல...ஊர்க் காரங்க எல்லாம் ஒண்ணு சேர்றீங்க...

RVS said...

ஆமாம் ஸ்ரீராம். ஊர்க்காரங்க கூட அரட்டை அடிக்கற இன்பம் வேறெதில் கிடைக்கும்... ;-) ;-)

இளங்கோ said...

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...

ச்சும்மா... said...

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்,நான் பரவாக்கோட்டை.

Unknown said...

நம்ம ஊர்க்கதைகளைப் படிக்க காத்திருக்கிறேன் ,...

RVS said...

சைக்கிள்ல கிளம்பிட்டேன் இளங்கோ... ;-)

RVS said...

ச்சும்மா... உங்களுக்கு பரவாக்கோட்டையா.. எங்க படிச்சீங்க... NHSS? வாழ்த்துக்கு நன்றி.

RVS said...

கே. ஆர். பி செந்தில்... நீங்களும் மன்னார்குடியா? அப்படி போடுங்க... பதிவுலகம் ஃபுல்லா நம்ம ஊர் ஜமா போலிருக்கே....

அப்பாதுரை said...

மன்னார்குடி போனதில்லை.
படித்துத் தெரிந்து கொள்கிறேன்.

RVS said...

எனக்கு தெரிஞ்சதை நான் சுற்றினதை தான் எழுதப்போறேன் அப்பா சார்... ரொம்ப எதிர்பார்க்காதீங்க. ;-)

Unknown said...

@RVS,

நான் ப்ளஸ் டூ படிக்கும்போது ட்யூஷன் வருவோம் (1988). சைக்கிள் எடுத்துகிட்டு சும்மா ஜாலியா 12 கி.மீ பரவாக்கோட்டையிலிருந்து வந்துருக்கேன் :) சிலசமயங்களில், நாங்களும் போய் அவரக் கூப்பிட்டுக்கிட்டு வருவோம். சந்திப்பதில் மகிழ்ச்சி!

@ரவி,

ஆமாங்க, ரவி. ஊர் பேர பாத்தவுடன் வந்துட்டேன்!!

@ச்சும்மா,

வணக்கம். பரவையில எங்கேங்க? நானும் பரவைதான். ஒரத்தநாட்டான் வீடு. கேயார்பி செந்தில் நம்ம மாப்ளேதான்.

@ராயல் ராஜ்,

நீங்க யாரு வீட்டு மாப்ளேன்னு சொல்லவே இல்லையே? :)

Venkatesh Balasubramanian said...

Great.. I had stayed in Pudhu theru near Keezha palam/Kailasanathar Temple for 2 years with my grandfather. What a great place. Nice nostalgic memories... bring it on... thanks.

மோகன்ஜி said...

மன்னையின் மைந்தனே!திண்ணை ரொம்பிடுச்சி!
கலக்குங்க!! உங்க "பால்குடி டேஸ்"ல இருந்தே ஆரம்பிங்க! வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் said...

எங்க ஊருக்கு பக்கம் என்றாலும் ஓரிரு முறை மட்டுமே அந்த மண்ணை மிதித்திருக்கிறேன்.
வேலைக்கு போகும் காலத்தில் மாளவன் என்ற நண்பன் இருந்தான்.L&T -ECC யில் வேலை பார்த்தவன்.

geethappriyan said...

நண்பரே
அருமையான கொசுவத்தி,கலக்கலாய் இருந்தது

geethappriyan said...

நண்பரே,நீங்க மன்னார்குடி ஃபேமிலி இல்லியே?:))

balutanjore said...

dear rvs

happy to read yr blog
i am from thevur (near kivalur)
(sonda oorkara eludarada padikka romba sandasam)
(inda tamil typing than vara mattenradu}

balu vellore

Unknown said...

நானும், தஞ்சாவூரானும் பரவாக்கோட்டைதான் சார் ..

RVS said...

@தஞ்சாவூரான்..
"மாப்ளே" என்ன அட்டகாசமான வார்த்தை. இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே. ஊரில் இருக்கும்போது எல்லோரும் எல்லோருக்கும் "மாப்ளே." கிட்டத்தட்ட நாம சம காலத்தில தான் படிச்சதா தெரியுது... இன்னும் கொஞ்சம் கிளியர் படம் போட்டீங்கன்னா உத்து உத்து பார்த்து தெரிஞ்சிக்குறேன் "மாப்ளே".

RVS said...

@வெங்கி

புதுத் தெருவில் எங்கே? எங்க.. ராதா டுடோரியல் பக்கத்திலா அல்லது குன்னியூர் பண்ணை தாண்டியா? ;-)

RVS said...

@மோகன்ஜி அண்ணா..
ஆமாமாம்.. திண்ணை ரொம்பிடிச்சு.. நாங்கெல்லாம் "பாசக்கார பயலுங்க.." கும்மி அடிக்க ஆரம்பிச்சோம்... தீர்ந்தது. நெட்டு... போல்ட் எல்லாம் கழண்டு ஓடிடும். ;-)

RVS said...

@|கீதப்ப்ரியன்|Geethappriyan|
பாராட்டுக்கு நன்றி. நாங்கெல்லாம்/நாமெல்லாம் ஒரே ஃபேமிலி தான். பதிவர் ஃபேமிலி!!!( புல்லரிக்குதா?) ;-) ;-) ;-)

RVS said...

@balutanjore
தேவூரா... திருவாரூர் போற ரூட்டுதானே.. கீழே இருக்கும் லிங்க் கிளிக்கி இங்கிலீஷ்ல அடிச்சா தமிழ்ல வரும். வெட்டி ஒட்டினீங்கன்னா நீங்களும் அழகு தமிழில் கமென்ட்டலாம். ஓ.கே வா.
http://www.google.com/transliterate/tamil

RVS said...

@கே.ஆர்.பி. செந்தில்...

ரொம்ப நெருங்கிட்டீங்க... அப்பப்ப ஊர்க் கும்மி வச்சுக்கலாம். ;-)

Chitra said...

(அப்பாடி! ஒருவழியா முன்னுரையை முடிச்சாம்ப்பா என்று பல பேர் விட்ட பெருமூச்சு "புஸ்... புஸ்..." என்று நல்லபாம்பு கணக்காக என் காதில் சீறுகிறது)


.....முன்னுரையிலேயே அமர்க்களப் படுத்துட்டீங்களே!

RVS said...

@வடுவூர் குமார்
உங்கள் ஊரில் சுரேஷ் என்று நம்ம தோஸ்த்து ஒருவர் இருந்தார். கிரிக்கெட் விளையாடுவார். உங்களுக்கு தெரியுமா? ஒல்லியா... கருப்பா.. ;-)

RVS said...

இன்னும் பாருங்க... நிறைய மேட்டர் இருக்கு சித்ரா... ;-)

கமல் said...

அருமை நண்பரே கதை படித்தவுடன் என் சிறுவயது ஞாபகம் வருகிறது தொடர்ந்து எழுதுங்கள்.

சிறுவயதுக்கு கொண்டுச் சென்றதுக்கு நன்றி.

தொடர்ந்து படிக்கிறேன்.

பொன் மாலை பொழுது said...

அம்பி, ஒரு சின்ன தப்பு நடந்துடுத்து. போஸ்ட் மாஸ்டர் பொண்ணு ஓடிபோவது மால்குடி டேச்சில் இல்லை. அது சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் ....gods and demons ...ஐயோ வரமாட்டேன்கிறதே......சின்ன வயசில் படிச்சது . ஞாபகமில்லே .....வயசயிண்டே போரதோன்னோ..

அதுசரி ...நோக்கு வர்ற கூட்டத்தை பாத்தியோ? இப்போ சந்தோஷம் தானே ? எல்லாம் ராஜ மன்னார் அனுகிரகம் டா கொழந்தே!! :))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா ஹாஸ்யமா எழுதியிருக்கீங்க தல!

விஷாலி said...

வாழ்த்துக்கள்
ஸ்டார்ட் மியூசிக்

RVS said...

கக்கு அம்பிக்கு ஒரு தேங்க்ஸ். ;-) ;-)

RVS said...

கமல்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வந்து எட்டிப் பாருங்க... ;-) ;-)

RVS said...

நன்றி ப்ரியமுடன் வசந்த்.. இன்னும் ரகளை இருக்கு.. ;-);-)

RVS said...

என்ன இன்னும் பத்து அண்ணாவைக் காணோம். ;-) ;-)

RVS said...

@மனசாட்சியே நண்பன்
ஸ்டார்ட் மியூசிக் இல்லை ஸ்டார்ட் சரவெடி... ;-) ;-)

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Hello!

I am also from mannargudi.

We stayed there in west second street. i studied at National Higher Secondary School.
Srinivasan is my Maths Teacher.

many congrats for having started writing about Mannargudi.

Wishing you all the best!

RVS said...

ஹாய் Sreedharan,

Thanks. I am very much delighted to gather a big group of Mannargudians. Nice to hear that you have studied in NHSS. I too from NHSS. I may write many things about Mannargudi with some degree of fiction for FUN. Enjoy!!!

In west second street where did you stay? Near GN house? or near petrol bunk Ramamorthy house? or near by that Pillaiyaar Koil...

I met Mr. Srinivasan, Maths teacher when I went to Mannargudi last time.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் தொடக்கம். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க நாங்க ரெடி. மன்னார்குடி பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எங்களுக்கும்!

வெங்கட்.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
என்ன ரொம்ப நாளா காணோம்?
மன்னார்குடி பற்றி தெரியுதோ இல்லையோ.. நாங்கள் அடித்த கொட்டங்கள் சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி சொல்லும் போதே மன்னார்குடி பற்றியும் சொல்வேன். முதலில் நான் வளர்ந்த இடத்தில் இருந்து ஆரம்பிக்க போகிறேன்... ;-)

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Hai RVS,

We stayed just three houses before Mr. Srinivasan's residence.We stayed at palakkatu Iyer house.

I last met Srinivasan two years before when i went there.

In another Blog on mannargudi, a group photo of all NHSS teachers was published. have you noticed?

I will find out the name of the blog and forward you.

Wishing you all the best!

RVS said...

Hi Sreedharan,

I saw that photo. I was one of the spectators at that event.

Thank You.

Venkatesh Balasubramanian said...

Hi RVS,

I stayed near Kunniyur Pannai. I think 3 or 4 houses after chinna panni's house. Very close to Kailasanathar temple. My chitthappa is still staying there in that house. Forgot the number.

RVS said...

Glad to hear from Mannargudian Venki. Where are you now?

பத்மநாபன் said...

மன்னார்குடி நாட்கள் தலைப்பை பார்த்தவுடன் எனக்கு ஆர்.கே.என் அவர்களின் மால்குடி டேஸ் ஞாபகம் வந்தது ..சரியாக அதையே வைத்து தொடங்கி இருந்தீர்கள் ...

உங்க பதிவு படிக்க ஆரம்பிக்கும் முன் குலுங்கி சிரிக்க இடம் பொருள் நேரம் அமைத்து தான் படிக்க ஆரம்பிப்பேன்
முன்னுரையிலேயே மூச்சுவிடாமல் நகைச்சுவை ஆரம்பித்து வீட்டீர்கள்.
ம.குடி சங்கமும் உலகெங்கும் பலமாக `` பாடுங்கடி ஆடுங்கடி ``ன்னு உங்களை வாழ்த்தி வரவேற்கிறது .

வாழ்த்துக்கள்...உங்கள் சிரிசேவைக்கு நன்றிகள்..

( //பால்குடி டேஸ்//- நம்ம அண்ணாத்தே மோகன்ஜி அவர்களூக்கு சிறப்பு ஷொட்டு )

RVS said...

ஆளையே காணோமே அப்படின்னு பார்த்தேன் பத்துஜி. அமர்க்களமான கமெண்ட்டுக்கு நன்றி. வரிசையா எழுதனும்னு நினைச்சிருக்கேன். பார்க்கலாம். ;-)

தமிழ் திரு said...

மன்னார்குடிக்கு சென்று வர உங்கள் கதைகளுக்காக காத்திருக்கிறேன்...நானும் NHSS தான் But ஜூனியர் ...!

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails