Monday, April 5, 2010

ஒரு பழ வியாபாரியின் சம்பாஷனைகள்



சாலையின் மையத்தில் கட் அடித்து அதிவீரசாகசங்கள் செய்யும் ஆட்டோ இல்லாத, இப் பூலோகத்தில்  எதைப்பற்றியும் கவலைப்படாமல் நட்ட நடு ரோடில்  ஓடும் மிதிசைக்கிள் கண்ணில்படாத, இருதயமே நிற்கும் அளவிற்கு பின்னால் "பாங்...பாங்.." என்று ஹாரன் அடித்து இம்சை செய்யும் சொகுசு(?) பேருந்து புழங்காத சாலையில் நேற்றிரவு பத்து மணியளவில்  பழம் வாங்க பழமுதிர்சோலை சென்றிருந்தேன். டாஸ்மாக் பழரசம் அருந்தி சக பிரதர்களுடன்(பி-யையும் ர-வையும் கொஞ்சம் இழுத்து படிக்கவும்) நடு ரோடில் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருந்த இந்த நாட்டின் வருவாய்க்கு பெரிதும் உதவும் உள்ளங்களை தாண்டி பழக்கடையில் புன்னகையில் பழரசம் ததும்ப கனி விற்ற அந்த பழக்கடைக்காரருடன் நடந்த உரையாடலை அப்படியே கீழே தருகிறேன். ஒவ்வொரு வரிக்கும் அவரின் அந்த மலர்ந்த சிரித்த முகம் இதை டைப் செய்யும்போது என்னை புன்னகை மன்னன் ஆக்கியது.

"அந்த திராட்சை எப்படி?"
"கிலோ என்பது ரூவா ஸார்"
"ஒரு கால் கிலோ குடுங்க.."
"அங்க இருக்கே அந்த திராட்சை எவ்வளவு?"
"அதே விலை தான்"
"ஏன் அங்கே வச்சிருக்கிங்க?"
"இங்க இடம் இல்லை. அதான்...அங்க இருக்கறதும் அதே லாட்டு தான். அதிலேர்ந்து வேணுமா? வேணும்னா தரேன். வேற ஸார்"
"ஆரஞ்சு எவ்வளோ?"
"அறுவது ரூபா கிலோ"
"ஓரத்தில இருக்கறதுக்கும், இங்க இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?"
"ரெண்டும் ரெண்டு ஓரத்தில இருக்கு.. அவ்வளவுதான்..."
"வெல..தரம்...."
"எல்லாம் ஒண்ணுதான்... கடைக்கு அந்த பக்கமா வரவங்களும் பாக்கட்டுமேன்னுதான் அந்த பக்கம் வச்சிருக்கோம். சொல்லுங்க வேற.."

*****
ஒரு கிரே கலர் ஷார்ட்ஸ்-வெள்ளை டிஷர்ட் அணிந்த டூ-வீலர் இளைஞன் கையில் கருப்பு ஹெல்மெட்டுடன்,
"அண்ணே, அந்த திராட்சை கொடுங்க...."
"எவ்வளவு"
"ஒரு கிலோ... கிழே இருக்கறதுக்கும் மேலே இருக்கறதுக்கும் என்ன வித்தியாசம்?"
"அது பச்சை, இது கருப்பு அவ்வளவுதான்... இரண்டையுமே சாப்பிடலாம்.. அல்வா மாதிரி இருக்கும்"
"அல்வா சாப்பிடறதுக்கு நாங்க ஆனந்தபவன் போவோம், இங்கே ஏன் வரோம்."
"இன்னிமே இங்கயும் வந்து அல்வா சாப்பிடுங்க.. திராட்சை அல்வா.. ஹி ஹி..."
*****

"ஸார். நீங்க சொல்லுங்க. வேற என்ன வேணும்?"
"ஆப்பிள் என்ன வெல"
"நூத்தி நாப்பது"
"கொஞ்சம் பாத்து சொல்லுங்க"
"ரொம்ப நாளியா ஒன்னொன்னா பாத்து, நல்லதா பொறுக்கி வெச்சிருக்கோம்... அப்படியே அள்ளிட்டு போங்க."
"ஒரு அரை கிலோ போடுங்க"

இப்படியே தொடர்ந்து பழம் தேடி வந்த மொத்தப் பறவைக்  கூட்டத்திடமும் ஒரு எம்.பி.ஏ லாவகத்துடன் என் கண் எதிரேயே பத்து நிமிடத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்தார்.

"அடுத்த முறை வாங்க ஸார்..."
"சரிங்க"

பையிலும் கடையிலும் பழம் பளீரென சிரித்தது.

பின்குறிப்பு: ராஜா ரவி வர்மாவின் இந்த கலை ஓவியத்தில் இருக்கும் களையான பெண்ணின் சிரிப்புக்கு ஒத்தது அக்கடைக்காரரின் புன்னகை. 'கனி' சுவைக்காக இந்த படம் இந்த பதிவில்.

4 comments:

Madhavan Srinivasagopalan said...

என்னாதான் சொல்ல வர்றீங்க..
உங்க ஊரு விலை-வாசி நிலவரமா?

cho visiri said...

Interesting post, sir, please accept my congratulation.

By the way, it is not "PuNyaajanam"and it is not even "PuNyaachanam". ..... it is actually "PuNyaavaachanam, if I am right.


Thus, there is no relationship between Janam (birth) and PuNyaavaachanam.

PuNyaavaachanam is a holy activity which is a process of purifying a place.

Even when the mortal remains of a person are cleared, PuNyaavachanam is done in neibourhood and the holy water is sprayed (ProkshaNam) in the whole house where the body of the deceased was kept.

Thus, there is no relationship between Janam (birth) and PuNyaavaachanam.

It appears, whaat you have referred to is the function of Namakarnam".

RVS said...

Dear Cho visiri,
I have changed the Namakaranam entry. I think this time it should be correct :) thanks for your comments.

RVS said...

என்ன சொல்ல வரோம்னா... நாங்க பத்து மணிக்கி போய் பழம் வாங்கினாலும் எங்கூரு ஆளு அவ்வளவு நல்லா உபசரிச்சு அனுசரணையா விக்கிறாரு... பழம் நல்லா இருந்திச்சி, ரோடுல கூட்டம் இல்லை, ஆட்டோகாரன் கட் அடிக்கலை.. இப்படி எழுதிகிட்டே போனா பின்னூட்டமே ஒரு பின்பதிவா போய்டும் போலிருக்கே... போதும்.. இத்தோட நிறுத்திக்கிறேன்...
கேள்விக்கு நன்றி மாதவா...

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails