நம்மூர்ல அழைப்பிதழ் பல டிசைன்ல அடிப்பாங்க. டாக்டர்கள் கல்யாணம்னா முன்னாடி பென்சில் ஸ்கிரிப்ட்ல பிள்ளையார் போட்டு கழுத்துல ஸ்தெதஸ் மாட்டி விடறது, சுபமுஹுர்த்த பத்திரிக்கையை திறந்தவுடன் சுப்ரபாதம் பாடறது, காதணி விழாவிற்கு ஒற்றை வளையத்தை பத்திரிக்கை ஓரத்தில் கோர்த்து அனுப்புவது, அப்புறம் நம்ம பார்த்திபன் பட பூஜைக்கு கூப்பிடற மாதிரி வித்தியாசமா தாலி கொடுத்து கூப்பிடறது (படம்: பொண்டாட்டி தேவை) அப்படி இப்படின்னு ஒரு புதுமை பண்ண எல்லோரும் முயற்ச்சிப்பாங்க. கீழே இருக்குற படத்தில Typography பயன்படுத்தி நேர படிச்சாலும் சிரசாசனத்தில நின்னு படிச்சாலும் தலைப்பு தலைகீழா மாறாம வர்ற மாதிரி வடிவமைச்சிருக்காங்க. இது மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் ஒரே அர்த்தம் தரும் முயற்சி.
(மேலே படத்தை அழுத்தி பெரியதாக பார்க்கவும்)
என்னுடைய பால்ய கால நண்பன் ஒருவன் சினிமாவில் கிராஸ் ஆங்கிளில் ஏதாவது காண்பித்தால் தலையை அதே டிகிரி அளவிற்கு சாய்த்துப் பக்கத்தில் இருப்பவரை பார்க்கவிடாமல் பார்ப்பான். அந்த அசௌகரியம் இந்த மேற்கண்ட படத்தில் இருக்காது.ஆங்கிலத்தில் Palindrome என்று ஒன்று உண்டு. இடமிருந்து வலம், வலமிருந்து இடம் படித்தாலும் ஒரே பொருள் தரும் வார்த்தைகளை பாலின்ரோம் என்பார்கள். உதாரணம் MADAM. தமிழில் அதுபோல் வரும் வார்த்தை "மாமா". மேலும் இதுபோல் தமிழில் உங்களுக்கு தெரிந்தவற்றை பின்னூட்டமாக தெரிவிக்கலாம்.
3 comments:
1) மோருபோருமோ
2) தெளுநீளுதே
3) விகடகவி
1) "Madam I'm Adam"
Madhava... Super....
தேளுநீளுதே (sorry for wrongly typed as தெளுநீளுதே)
Post a Comment