Saturday, May 8, 2010

கோடைகால சிறப்பு முகாம்கள்

சுட்டெரிக்கும் சூரியன் மிக ஷார்ப்பான கத்திரி, அக்னி நட்சத்திரம் என்று எது காட்டினாலும், நாம் அடங்குவதாக இல்லை. மூலைக்கு மூலை A4 சைஸ் பேப்பரில் ஆரம்பித்து அரசியல் கட்சிகளின் "வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறோம்" போன்ற ஆளுயர டிஜிட்டல் பேனர் அளவு வரை கீழ் கண்ட பயிற்சிகள் அல்லது முகாம்களின் விளம்பரங்கள். ப்ளாட்களில், பள்ளிகளில், திருமண மண்டபங்களில், சமுதாயக் கூடங்களில், மைதானங்களில், குளங்களில், குட்டைகளில், பலஅடுக்கு மாடி குடியிருப்புகளில், ஃபிட்னஸ் மையங்களில்,தெருக்கோடி பிள்ளையார் மற்றும் ஐயப்பன் கோயில்களில் என்று ஓரிடம் விடாமல் நடக்கும் இந்த சிறப்பு பயிற்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பயிற்சிகளில் சேர்வதற்கான தகுதி அருகே தரப்பட்டுள்ளன.

1. வரையும் கலை - 27 மாதங்கள் நிரம்பி இருக்க வேண்டும் (அ) பென்சிலால் கிறுக்கும் திறமை (அ) பென்சிலையாவது பிடிக்கும் திறமை இருந்தால் அது முதல்...
2. கிரிக்கெட் - தேசிய அளவில் விளையாடிய வீரர் தரும் பயிற்சி (எப்போது, எங்கு, எந்த மாநிலத்திற்கு விளையாடினார் என்ற நதிமூலம் ரிஷிமூலம் எல்லாம் கேட்க கூடாது)
3. UC MAS மற்றும் ABACUS முறை கணிதப் பயிற்சிகள் - குண்டு மணி உருட்ட தெரியும் வயது முதல் 
4. நீச்சல் பயிற்சி -- மூன்று மாத குழந்தைபோல்  குப்புறப்படுத்து தரையில் நீஞ்சத் தெரிந்தால் (அ) கை கால் அசைக்க தெரிந்தால் போதும் 
5. கதகளி, குச்சிபுடி, ஒடிசி, பரதநாட்டியம், வெஸ்டர்ன், ஈஸ்டேர்ன், பாங்க்ரா, டிஸ்கோ போன்ற அனைத்து வித நடனங்கள் - இதுவும் பட்டியல் (4) போல, அது படுத்துக்கொண்டு இது நின்றுகொண்டு    
6. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வாரணம் ஆயிரமுக்கு அப்புறம் கிடார், வயலின் இன்னபிற Percussion வாத்தியங்கள் - சகலருக்கும், வாய் பேசமுடியாமல் இருந்தால் அவர்களுக்கு 'ஹம்மிங்' கற்றுத்தரப்படும்
7. கராத்தே, குங்க்ஃபு போன்ற தற்காப்பு பயிற்சி வகுப்புகள் - கையையும், காலையும் முன்னும் பின்னும் அசைத்து காற்றை குத்த தெரிந்தால் போதும், ஒரு கருப்பு பெல்ட் இலவசம்.
8. 'பேச்சு' ஆங்கில வகுப்புகள் -- வீடு பேருக்கும் வேலைக்காரி பாடும் ஆங்கில பாடல் கற்க தூண்டும் "பேசும்" ஆங்கில வகுப்புகள். - 18 புத்தகங்கள் வீட்டிற்கு அனுப்பப்படும் அல்லது 18 நாட்கள் மாலை அரை மணி நேரம். ஆங்கிலேயருக்கு இணையாக பேசலாம்.
9. இதுபோக, ஒன்பதாவது மற்றும் பதினொன்றாவது தேறியவர்களுக்கு அடுத்த வருட பொதுத் தேர்வுகளுக்காக சிறப்பு வகுப்புகள் பள்ளிக்கூடங்களிலேயே - காலை 8.30 முதல் மாலை 5.30 வரை. பள்ளி நூறு சதவீதம் வாங்க வேண்டுமே. ஒன்பதாவது மற்றும் பதினொன்று படிப்பவர்கள் தொடர்ந்து இரண்டு வருடம் படிக்கவேண்டும் இரண்டு நாட்கள் தவிர. அது சரஸ்வதி பூஜை நாள்.
10. யோகா - மிக மிக சூடான வியாபாரமாக போய்க்கொண்டு இருக்கும் ஒரு அதி சிறப்பு பயிற்சி. தரையில் சம்மணம் போட்டு நேராக உட்காரத் தெரியாமல் மரச்சேர் போட்டு உட்கார்ந்து இருப்பவருக்கு கூட 'குண்டலினி' சக்தி எழுப்பி தரப்படும்.

கொரில்லா பயிற்சியை தவிர, சகலமும் இந்த ஓரிரண்டு மாதங்களில் கற்றுத் தரப்படுகிறது. அப்பா அம்மா இருவரும் வேலைக்கு செல்வோர் என்றால், வீட்டில் இருக்கும் முட்டி தேய்ந்து போன பாட்டி தாத்தா பெண்டு கயண்டு விடுகிறது. பிள்ளைகளை பத்திரமாக கொண்டு போய் விட்டு வாசலிலே செக்யூரிட்டியுடன் பேசிக்கொண்டே ஒருமணி நேரமோ இரண்டு மணி நேரமோ நின்று விட்டு அழைத்து வரவேண்டும். பணிபுரியும் பெற்றோரைவிட, வீட்டில் இருக்கும் தாத்தா பாட்டிக்கு வேலை அதிகம். மேற்கண்ட பயிற்சிகள் நடக்கும் இடம், நடத்தப்படும் விதம், நடத்துபவர், பயிற்சியின் பாப்புலாரிட்டி, தற்போதைய டிரென்ட் (பக்கத்து வீட்டில் பாட்டு என்றால் நாமும் பாட்டு, கராத்தே என்றால் கராத்தே), பயிற்சி வகுப்பின் மாணவச் செல்வங்களின் எண்ணிக்கையை பொறுத்து 250 ரூ முதல் 2500 ரூ வரை "வசூல்" செய்யப்படும். பயிற்சியில் பங்கு பெற்றதற்கு ஒரு தடிப்பான அட்டை காகிதத்தில் ஒரு சான்றிதழ் வழங்கப்படும். மீண்டும் அடுத்த கோடையில் இந்த 'அதிகப்படியான' பயிற்சிகளை சந்திக்கும் வரை குழந்தைகளுக்கு ஒரு பெரிய "அப்பாடா....." என்றிருக்கும். தாத்தா பாட்டி உள்பட.

இது என்ன கோடை விடுமுறையா அல்லது கோடை பயிற்சிமுறையா? ஒரே ரணகளப் படுத்துறாங்கப்பா..  சொன்னது ரைட்டா, தப்பா?  பின்னூட்டத்துல சொல்லுங்க சார்.  நன்றி.

8 comments:

அன்புடன் அருணா said...

எதுவுமே ஓவர் டோஸ் ஆனால் இப்படித்தான்!

அனு said...

நிஜமா தாங்க..
ஒரு மாசம் குழந்தைங்க ரெஸ்ட் எடுக்க விட மாட்டேன்றாங்க.. Concrete காலாச்சாரத்தால் குழந்தைகளோட outdoor activities குறைஞ்சு போச்சு.. எத்தை தின்னா பித்தம் தீரும்-ன்ற மாதிரி ஏதாவது கிடைச்ச க்ளாஸ்ல தள்ளி விட்டுட்றாங்க..

மன்னார்குடி said...

ரைட்டு..

RVS said...

அன்புடன் அருணா,
'போட்டிமயமான உலகு' என்று எல்லோரும் தன் பிள்ளைகளை போட்டு பிடுங்குகிறார்கள். என்ன செய்வது?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,

அன்புடன் ஆர்.வி.எஸ்.

அனு,
என்ன பண்றது, பக்கத்து வீடு பையனுக்கு நாலு தெரிஞ்சிரிசுன்னா நம்ம பையனுக்கு ரெண்டானும் தெரியனுங்கர கட்டாயத்துல சேர்க்கவேண்டியதாயிருக்கு .. கரெக்டா?
கருத்துக்கு நன்றி..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

நன்றி மன்னார்குடி உங்கள் ரைட்டுக்கு

ஸ்ரீராம். said...

அந்தக் காலத்துல இப்படி எல்லாம் பயிற்சியாவது, மண்ணாங்கட்டியாவது...விடுமுறையை நன்றாக ரசித்து, அனுபவித்து கொண்டாடிய இளமைக் காலங்கள்...இவ்வளவு டிவி சான்னல்கள் கூட கிடையாது..ரேடியோ வில் பாட்டு, சில நல்ல புத்தகங்கள்...விளையாட்டு...இதெல்லாம் இந்தக் காலக் குழந்தைகள் மிஸ் பண்ணுகிறார்கள் என்றாலும்...
இவற்றில் நன்மையையும் உண்டு...காலம் அபபடி...

RVS said...

மீடியாக்கள் ஆதிக்கம் இல்லாத அந்தகால விடுமுறைகள் பேரின்பமே...
கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Madhavan Srinivasagopalan said...

//மீடியாக்கள் ஆதிக்கம் இல்லாத அந்தகால விடுமுறைகள் பேரின்பமே...
//
Well said

Anonymous said...

Free Nude Celebrities Pictures - Galleries Of Young Naked Celebrities. [url=http://officearticles.info/celebrity-stolen-videos.html]officearticles.info[/url]

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails