Monday, July 19, 2010

பண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்

madonபோர்பஸ் பத்திரிக்கை உலகில் செல்வத்தில் விழுந்து புரளும் முதல் பத்து சங்கீத மாமணிகள் பற்றி ஒரு பட்டியல் தந்துள்ளது.  கித்தாரை தலைமை பாட்டுக் கருவியாக கொண்ட U2 என்ற ராக் இசைக்குழு முதலிடத்தில் உள்ளது. "அடல்ட்ஸ் ஒன்லி" ஆட்டம் மற்றும் பாட்டுக்காரி மடோன்னா எட்டாவது எடத்திலும் லேடி காகா ஏழாவது இடத்திலும் உள்ளார்கள். பல வருடங்கள் உருண்டு ஆடியும் பல பேர் போட்டியிடும் மேலைநாட்டு சங்கீத சாகரத்தில் வயசானாலும் 'அந்த' ஸ்டைல் மாறாத மடோன்னா முதல் பத்தில் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. மடோன்னாவிடம் வயது ஏற ஏற இளமையும் ஏறுவதாக அகில உலக மடோன்னா ரசிகர் மன்றத் தலைவன் என் நண்பன் மடோன்னா மனோகர் அடித்து ஆணித்தரமாக கூறுகிறான்.

வாரத்தின் ஆரம்பம் மடோன்னாவின் கொண்டாட்டத்துடன் குதூகலமாகத் தொடங்கட்டும்.. மடோன்னாவின் Celebration ஆல்பத்திலிருந்து...இதைப் பார்த்துவிட்டு என்னை சபிக்கும் மக்கள் அனைவருக்கும், நமது தமிழ்ப் படங்களில் வரும் அங்க அசைவுகளும் இதுவும் சற்றேரக்குறைய ஒன்றே. நமது படங்களில் கருங்கூந்தல் கொண்டு ஆடுவார்கள், இங்கே மடோன்னா தங்கக்கேசம் கொண்டு ஆடுகிறார் அவ்வளவு தான் வித்தியாசம். விரசத்தனத்தில் தமிழ்ப் பட அசைவுகளைவிட கொஞ்சம் குறைவாக இருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. மேலே மடோனாவைப் பார்த்த விழி பார்த்தபடி பூத்தக் கையோடு கீழே கமலும் சௌந்தர்யாவும் ஆடும் "காதலா காதலா" படத்தில் வரும் "மடோன்னா பாடலா நீ.." பாடலைப் பாருங்கள். நான் மேலேசொன்ன வார்த்தைகள் நிஜமெனப் புரியும் சமயத்தில் "ஆமாம்..ஆமாம்" என்று உங்கள் தலை ஆடுவதை நீங்களே உணர்வீர்கள்.கலையை ரசிக்கும் கலா ரசிகர்களுக்கு நன்றி. இதோ அந்தப் பத்துப்  பெரிய புள்ளிகளின் வரிசை..

  1. U2, $130 million.
  2. AC/DC, $114 million.
  3. Beyoncé Knowles, $87 million.
  4. Bruce Springsteen, $70 million.
  5. Britney Spears, $64 million.
  6. Jay-Z , $63 million.
  7. Lady Gaga, $62 million.
  8. Madonna, $58 million.
  9. Kenny Chesney, $50 million.
  10. Black Eyed Peas and Coldplay, tied at $48 million.

அதிருக்கட்டும், நம்ம இசைப் புயல், இசை ஞானி போன்றோர் வாங்கும் சம்பளம் இவர்களது தொகையில் எவ்வளவு பைசா என்று யாருக்காவது தோராயமாகவாவது தெரியுமா?

தகவல் உதவி: http://www.cbc.ca/arts/music/story/2010/07/17/forbes-musicians-u2.html?ref=rss
மடோன்னாவின் மேற்கண்ட படம்  மற்றும் மேலதிகத் தகவல்களுக்கு: www.madonna.com

2 comments:

வடுவூர் குமார் said...

என்ன‌ இந்த‌ ப‌க்க‌ம் காற்று அடிக்காம‌ல் இருக்கு?? ப‌டிச்சிட்டு அப்ப‌டியே போய்விடுகிறார்க‌ளா?

RVS said...

hi hi.... vetkamaa irukko ennamo... :) :)

anbudan RVS.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails