என்னடா வர வர அட்டகாசம் ரொம்ப ஜாஸ்த்தியா போவுதே அப்படின்னு நினைக்கிறீங்களா? ஷங்கர் மணிக்கெல்லாம் ப்ளாக் மூலமா சேதி சொல்ல ஆரம்பிச்சிட்டான் இது எங்க போய் நிற்குமோ என்று கலங்குரீங்களா? கவலையை விடுங்க. மேலே படிங்க. கீழே படிங்கன்னு சொல்லணுமோ?
தலைப்பில் குறிப்பிட்ட ஸ்டார் இயக்குனர்களுக்கெல்லாம் இது நிச்சயம் தெரிந்திருக்கும். இணையத்தில் மேய்கிற ஆட்களை வலை போட்டு உள்ளே இழுக்கிற மாதிரி ஒரு தலைப்பு வேணும், அதோட மட்டுமல்லாமல் இப்போதைக்கு இந்த ரெண்டு பேர் தான் நிறைய பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கிறார்கள். இவர்களது தயாரிப்பாளர்கள் சீக்கிரம் தலையில் துண்டு போடுவதிலிருந்து கொஞ்சம் பிழைத்துக் கொள்ளட்டுமே என்று இந்த பதிவு.
பல மாடி கட்டிடங்களுக்கு மேலே கார் ஓட்டி, பைக் ஒட்டி, திருடனை துரத்தி, சைரென் வைத்த வண்டியில் போலீஸ் துரத்தோ துரத்து என்று துரத்தி, இருநூறாவது மாடி மேல் ஹீரோவும் வில்லனும் கட்டிப்பிரண்டு சண்டை போடுவது, மரம் விட்டு மரம் மாதிரி கட்டிடம் விட்டு கட்டிடம் தாவுவது போன்ற பல காட்சிகளுக்கும், நடுக்கடல், நடு பாலைவனம் போன்ற நட்ட நடு இடங்களையும் ஒரு ஹெலிகாப்டர் கொண்டு சிரமப்பட்டு எடுக்கும் காட்சிகளை கீழ்காணும் டெக்னாலஜி கொண்டு இலகுவாக எடுத்தது தள்ள முடியும். இதனால் நேரம் மிச்சப்படுவதோடு டப்பு நிறைய மிச்சமாகும் என்று சொல்கிறார்கள்.
எதை வைத்து இந்த மாதிரி காட்சிகள் எடுக்கிறார்கள் என்பது கீழே. ஒரு பையன் ட்ரம்ஸ் வாசிக்கறது, நீர் நிலைகள் மேலே நாம ஓட்டாஞ் சில்லு எடுத்து "தவளை" அடிக்கரமாதிரி தண்ணியோட உரசி, சில அற்புதமான ஷாட்ஸ் இந்த வீடியோவில் இருக்கு.
எப்படியெல்லாம் காட்சிகள் எடுக்கலாம் என்பது இங்கே.
இந்த இரண்டாவது Free Style Mountain Biking என்ற ஆபத்தான விளையாட்டு வீடியோவில் நடித்திருப்பது சாரி வண்டி ஓட்டியிருப்பது Basagoitia, இதுலதான் அவர் வாழ்க்கையும் ஓடுது ஏன்னா அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர். இந்த "பயம் அறியான்" நிகழ்ச்சியை வழங்குபவர்கள் Red Bull கம்பெனியார். ( இவரோட பெயரை தமிழில் எழுதுவதற்கு ஒரு கணம் கூட நான் முயற்ச்சிக்கவில்லை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்ள பெருமைப்படுகிறேன். நண்பர்கள் பின்னூட்டத்தில் முயற்சிக்கலாம்.) அண்ணன் சும்மா கில்லி மாதிரி காலாலேயே சைக்கிளை சுத்தி சுத்தி வளைய வர்றாரு பாருங்க. இந்த பறக்கும் கமெரா கொண்டு இவர் அந்தரத்துல ஆடுற விளையாட்டையும், மாடு நாக்கை தூக்கி மூக்கில விடறதை மாட்டோட மூக்கு துவாரங்கள் வரைக்கும் பறந்து போய் எடுத்துகிட்டு வருது. Feast for Eyes. A must watch with Music.
இந்தக் கமெராவை வைத்து நம்மூர்ல இன்னும் என்னவெல்லாம் பண்ணுவாங்க அப்படீன்னு ரூம் போடாம யோசித்ததில்..
1. இந்தியா பாகிஸ்தான் பார்டர்ல தீவிரவாதிங்க போக்குவரத்தை உளவு பார்க்க வச்சுக்கலாம்.
2. எங்கயாவது குளம் மற்றும் ஆத்தோரத்துல சும்மா பட்டம் மாதிரி மேல பறக்க விட்டு குளிக்கறத படம் புடிச்சிட்டா நம்ம தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாச்சாரம் என்னத்துக்கு ஆவறது? ரொம்ப டேஞ்சர்.
3. தீபாவளி, பொங்கல் சமயங்களில் தி.நகர் ரெங்கநாதன் தெரு போன்ற ஜன சந்தடி மிகுந்த இடங்களில் கூட்டம் மேலே பறக்கவிட்டு ஜேப்டி திருடர்கள், இடி மன்னர்களை கண்டு பிடித்து உள்ளே தள்ளி கவனிக்கலாம்.
4. நம்ம வீட்டுல ராத்திரி தங்கம் சீரியல் பார்க்கும்போது கரண்ட் இல்லாம பக்கத்து தெருவில இருந்தா கேமராவை அனுப்பி படம் புடிக்கச் சொல்லி வீட்டுக்கு கொண்டு வந்து கரண்ட் வந்தப்புறம் போட்டு பார்க்கலாம்.
ஏற்கனவே, அடர்ந்த காடுகள்ல பாம்பு பல்லி படம் புடிக்கறதுக்கு இந்தமாதிரி ஒரு ரிமோட் வச்ச கமெராவை ஒரு ஆள் படுத்துகிட்டே படம் புடிக்கறதை ஒரு நாள் நேஷனல் ஜியாகரபி சானெல்ல காண்பிச்சாங்க.
இந்த ப்ளாக் மூலமாக தமிழ் திரைப்பட உலகத்திற்கு என்னால முடிந்த ஒரு அருந்தொண்டு ஆற்றியிருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு உடம்பெல்லாம் புல் அரிக்குது.
0 comments:
Post a Comment