Tuesday, December 7, 2010

ஜாலிலோ ஜிம்கானா

முன்குறிப்பு: எப்போது பின்குறிப்பில் பாடாய் படுத்தும் நான்  இந்தப் பதிவிற்கு முன்குறிப்பு எழுத அவசியம் எனப்பட்டது. அப்பாஜி எனக்கு ஜி அலர்ஜி என்று சொன்னார். அதற்க்கு மோகன்ஜி கீழ்கண்ட முதல் பாராவை கொடுத்து எவ்வளவு ஜகாரம் உங்களால் எழுத முடியுமோ எழுதி ஒரு சிறுகதை புனையுங்கள் என்று கட்டளையிட்டார். அவரின் ஆஞ்ஞையை மீற முடியாமல் ஜம்மென்று மலர்ந்தது ஒரு "ஜ" பதிவு. எவ்வளவு ஜ இருக்கிறது என்று பின்னூட்டத்தில் அவசியம் குறிப்பிட வேண்டாம். முடிந்தால் இரு எழுத்துக்களில் ஒரு "ஜே" போடுங்கள். நன்றி.


ஜா மாமி தந்த பஜ்ஜி ,சொஜ்ஜியை லஜ்ஜை இல்லாமல்,கஜ்ஜை வரிந்துகட்டி,மஜாவாய் உள்ளேதள்ளி, பேஜாராகி,ஜீரணம் ஆகாமல் ஜின்ர் ஜோடா ஜிவ்வுன்னு உறிஞ்ஜி ஜிங்கர ஜிங்கா ஜீபூம்பா ன்னு ஜாலியாய் பாடிக்கொண்டே ஜித்தன் போல் வந்தான் ஜீவா! இவ்வளவு ஜாலியாக என்றுமே இருந்ததில்லை அவன்.
 
"என்ன இன்னிக்கி ஒரே ஜாலியா இருக்கியே? என்ன விசேஷம்?" என்றாள் அவனுடைய ஜீவஜோதி ஜானகி. கொஞ்சம் மூக்கை உறிஞ்சி பேசியதில் அவளுக்கு ஜல்ப்பு பிடித்திருக்கிறது என்று புரிந்துகொண்டான்.
"இல்ல இன்னிக்கி என்னோட ஆதர்ஷ ஹீரோ நம்ம ஊருக்கு வரார்" என்றான் ஜீவா. "அங்க பார்" என்று அவன் காட்டிய தெருவெங்கிலும் "இன்று ஜோலார்பேட்டைக்கு விஜயம் செய்யும் எங்கள் தலைவர் ஜனரஞ்சக நடிகர் கஜினி அவர்களை வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம்" என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தார்கள். "அண்ணனுக்கு ஜே.. " என்று தெருமுனையில் கூம்பு ஸ்பீக்கர் காட்டு கத்தலாக அலறியது.

rasigar mandram


"ஆருயிர் அண்ணன்... நம் தலைவர்.....கலைவானில் ஈடுஇணையற்ற ஒரே நட்சத்திரமாக ஜொலிக்கும் கஜினி வந்து கொண்டிருக்கிறார். இன்னும் சற்று நேரத்திற்க்கெல்லாம் நம் ஊரின் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள்" என்று ஜீப்பில் ரஜினி போல அறிவிப்பு செய்துகொண்டு விசிலடித்து பறந்தார்கள்.

பச்சை பேண்ட், மஞ்சள் சட்டையில் கருப்பு கோடு என்று ஜாம் ஜாம்ன்னு டிரஸ் பண்ணிக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக ஜமாவில் சேர்ந்தான் ஜீவா. பழக்கடை ஜான் தான் வேட்டு, பூ அலங்காரம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தான். அவனுடைய வியாபார சகாக்கள் எல்லோரும் அவனுடன் சேர்ந்து அவன் தலைமையில் மன்ற திறப்பு விழாவிற்காக விசர்ஜனத்துக்கு கூட ஒதுங்காமல் அதி ஜரூராக வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
"டேய்.. எல்லாரும் ஒழுங்கா வேலை பாருங்க... அப்பத்தான் தலைவர் கிட்ட நின்னு போட்டோ எடுத்துக்க விடுவேன்...இல்லைனா ஜனத்தோட ஜனமா நீங்களும் வேடிக்கை பார்த்துட்டு போய்டவேண்டியதான்" என்று ஜபர்தஸ்த்தா எல்லோரிடம் பேசி மேடையும் பூ அலங்கார வேலைகளையும் முடுக்கி திருகி விட்டுக்கொண்டிருந்தான் அந்த ஜெகஜ்ஜால கில்லாடி. நிச்சயம் அவர் வந்து மன்றம் திறந்து வைக்கும் அந்த மூன்று நிமிடத்தில் முன்னூறு பேரோடா படம் எடுத்துக் கொள்ள முடியும். கனஜோராக ஜருகண்டி ஜருகண்டி என்று பாலாஜி பார்க்கும் பக்தர்களை விரட்டுவது போல விரட்டி விடுவார்கள். இப்படித்தான் போன மாதம் கஜினி நடித்த "ஜே!" படத்திற்கு முதல் காட்சி முதல் டிக்கெட் வாங்கித் தரேன் என்று சொல்லி ஜெர்க் கொடுத்தான். கடைசியில் ஊர்க்கோடி விஜயா-வாஹினி டென்ட் கொட்டாயில் போட்ட ஜம்பு படத்தில் உட்கார்ந்து பொழுதை போக்கிவிட்டு லஜ்ஜையே இல்லாமல் சிரித்துக்கொண்டே வந்து எல்லோரிடமும் "ஜீசஸ் மேல சத்தியமா.. நாளைக்கு கண்டிப்பா.... எல்லாரும் போலாம்..." என்று வழிந்தான்.

ஜான் எப்போதும் ஜானகியை பார்த்து ஜொள் விடுவான். அவன் ஜொள் விடும் தருணங்களில் ரோடில் நடப்பவர்கள் வழுக்கி விழும் படி ஜொள்ளாறு ஓடும். அந்த வாய் பிளந்த வேளைகளில் அப்படியே அவன் பிராணன் போய்விடும் போல இருக்கும். அவள் தெருமுனை திரும்பியதும் யாரோ மந்திரவாதி ஜீபூம்பா போட்டா மாதிரி வாய் ஜிங்கென்று மூடிக்கொள்ளும். அவன் ஜீவன் எடுத்ததே அவளை ஜெராக்ஸ் எடுப்பது போல பார்க்கத்தான் என்று நினைப்பு அவனுக்கு. நிஜமாக வேலைக்கு ஒன்றும் ஆகாது என்று அவனுக்கு தெரியும். ஏனென்றால் ஜானகியின் மாமன் மகன் ஜி.வாசன். அந்த ஜீவா அவளுக்காக இப்பவே ஜானுவாச காரில் உட்கார்ந்து மாப்பிள்ளை ஆவதற்கு ப்ராக்டீஸ் செய்கிறான். ஜானின் ஜல்சா கனவுகள் ஜானகியிடம் பலிக்காது என்று தெரிந்தும் ஜென்மாந்தரத்துக்கும் அவளை பார்த்து ஜொள்ளினான்.

இப்போது தெருக்கோடி கூம்பு ஸ்பீக்கர்  "ஜாங்கு ஜக்கு  ஜஜக்கு ஜக்கு ஜாங்கு ஜக்கு ஜா.." என்று தளபதி பாடிக்கொண்டிருந்தது. திரையுல ஜாம்பவான் இன்னும் சற்று நேரத்திற்க்கெல்லாம் ஜனசமுத்திரத்தில் சங்கமமாகி மன்றம் திறந்து வைப்பார் என்று இன்னொரு நேர்முக வர்ணனை அறிவிப்பு ராக்கம்மா கைய தட்டுவை பாஸ் செய்து மீண்டும் கை சொடுக்குவதில் இருந்து பாட விட்டது.

சரியாக இரவு ஒன்பது மணிக்கு கஜினி ஜம்முன்னு ஜமுனா ராணியுடன் வந்து இறங்கினான். ஜமுனா ராணி வளர்ந்து வரும் நடிகை. கஜினி  ஜமுனாவுடன் சகஜமாக எங்கும் வளைய வந்தான். எங்கும் அதிர்வேட்டு. மலர் தூவி வரவேற்றார்கள். ஜிகினாவும் பல வண்ண ஜரிகைகளும் தொங்கும் மேடைக்கு தாவி ஏறினான். கூடவே ஜாடிக்கு மூடியாய் வந்த ஜமுனாவால் அதுபோல் ஏறமுடியாமல் பெண்ணிற்கே உண்டான நளினத்துடன் ஏறினாள். அவன் காலை தொங்கப் போட்டு அடக்கத்துடன் உட்கார அவள் போட்டிருந்த மிடியையும் பொருட்படுத்தாமல் ஜட்டி தெரிய கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்தாள். ஜனத்திரள் "ஜமுனா.. ஜமுனா" என்று அவள் பெயரை பஜனை செய்ய ஆரம்பித்தது.

உட்கார்ந்த இரண்டு நிமிடத்திலேயே ஜமுனாப் புகழ் விஸ்வரூபமாய் வளர வெறுப்பு வந்தவனாய் வைத்திருந்த குலோப்ஜாமூனைக் கூட ருசிக்காமல் "எங்கே மன்ற திறப்பு விழா" என்று கேள்வியாய் தலையை ஆட்டி ஜானிடம் கேட்டு மேடையை விட்டு இறங்கினான். ஜமுனாவும் இறங்கி அவனுடன் வந்தாள். ஜிலுஜிலுவென்று காற்று வீச அவளுடைய ஓவர்கோட் பறந்து படபடத்தது. சுத்தி நின்ற ரசிகர்களின் நெஞ்சமும் அவ்வண்ணமே செய்தது. கத்திரியை எடுத்தான் நறுக்கினான் கையை தலைக்கு மேலே அரசியல்வாதி போல தூக்கி பெரிய கும்பிடு போட்டான் ஜோடியாக காரில் ஏறி உட்கார்ந்து போயேவிட்டான். இந்தக் கடைசி ஐந்தாறு காட்சிகள் முப்பது வினாடிகளில் முடிந்தது. வழக்கம் போல ஜான் எல்லோரிடமும் வழிந்து கொண்டிருந்தான்.

மறுநாள் காலையில் ஜீவா ஜானகியிடம் நேற்று அர்த்தஜாமம் வரையில் ரசிகர் மன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகளை பற்றி தொகுத்து பேசி கிண்டலடித்துக்கொண்டிருந்தான்.
"கஜினி ஒரு பயல பார்க்கலையே... ஜானுக்கு ஜன்னியே வந்திருச்சு..."
"கஜினியை ஜலஜா மாமி பார்க்கணும்னாளே என்னாச்சு..."
"கஜினி வந்துட்டார்ன்னு ஸ்பீக்கர்ல சொன்னவுடனே.. ஜெகன்மோகினி மாதிரி ஓடி வந்தாப் பாரு ஜம்போ ஜலஜா மாமி. எல்லோரும் அரண்டு போய்ட்டோம். ஜிங்கு ஜிங்குன்னு ஓடி ஆடி வர நடையைப் பார்த்து தான் மாமின்னு கண்டுபிடிச்சோம். ஏன்னா மத்த ஜாடையில அப்படியே உன்னை மாதிரியே இருந்தா தெரியுமா?" என்று நக்கலாக சிரித்தான் ஜீவா.
"அப்புறம் என்னாச்சு..." என்று அவன் நக்கலை சகஜமாக எடுத்துக்கொண்டு அடுத்த கேள்விக்கு தாவினாள் ஜானகி.
"ஜன சமுத்தரத்தில கரைஞ்சு கஜினியை பார்க்க ஆளாய்ப் பறந்தாள். நம்ம ஜனங்க ஜமுனாவை பார்த்து ஐஸா உருகி தண்ணியா ஊத்தினதுல பார்க்க முடியாம போய்டுத்து.."
"அச்சச்சோ.... ரொம்ப வருத்தப்பட்டுருப்பாளே மாமி..."
"ஆமாமாம்... என்ன பண்றது.. எவனோ ஒரு களவாணிப் பயல் 'ஜாம் பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டை கொக்கு..'ன்னு அந்த சீனுக்கு ஒரு பாட்டு சிடி போட்டுட்டான்"
"மாமியை கிண்டலடிக்கவா?" பாவமாக கேட்டாள் ஜானகி.
"ஆமாம். கடைசியா நான் மாமிகிட்ட சொன்னேன்.. அந்த கொக்காப் பொறந்திருந்தா கஜினியை பார்த்திருக்கலாமோ?"
"என்ன இருந்தாலும் ஒனக்கு நக்கல் ஜாஸ்த்தி. உன்னை கிழிச்சிருப்பாளே.." என்றாள் ஜானகி.

"கழுத்தை ஒரு வெட்டு வெட்டி ஜல் ஜல்ன்னு பொங்கல் மாடு மாதிரி கொலுசு அதிர கோச்சுண்டு போய்ட்டாள்."

"ஏண்டிம்மா ஜானகி... " என்று அந்த ஜல் ஜல் வந்து கொண்டிருந்தது... ஜீவா அங்கிருந்து "ஜாலிலோ ஜிம்கானா" என்று பாடிக்கொண்டே ஜம்ப்பினான்.

பின் குறிப்பு: கஜினியின் ஒரு படம் கூட சில்வர் ஜூப்ளி போகாததும், ஜானுவும் ஜீவாவும் சின்ன வயசில் அடி ஜூட் விளையாண்டதும், ஜான் இதற்க்கு முன் கஜினியை பார்க்காமலே வீண் ஜம்பம் அடித்ததும், ஜலஜா மாமியின் ஜிலேபியை சாப்பிட்டு ஜீவாவுக்கு ஜுரம் கண்டதும், கஜினி அந்த ஹிந்தி நடிகை நீரஜாவை கை கழுவிட்டு ஜமுனா பின்னால் போனதும், எப்போதும் ஜல்லடையாக கேள்வி கேட்பவள் ஜானு என்பதையும், அவளுக்கு கடைக்கு போய் ஒரு கடுகு ஜீரகம் கூட வாங்கத் தெரியாது என்பதும், சரணம் ஐயப்பாவை சரணம் ஜயப்பா என்று ஜானகி படிபூஜைக்கு கோலம் போட்டதும் இந்த சிறுகதையில் நான் ஜல்லியடிக்காத ஜகரங்கள்.

பட உதவி: movies.sulekha.com

-


47 comments:

தக்குடு said...

ஜமாய்ச்சுட்டேள் போங்கோ!! ராத்ரி 11.40 வரைக்கும் அசராம கலைபணி பண்ணும் உங்களை ஆத்துல யாரும் கண்டிக்க மாட்டாளா அண்ணா??..:))

Aathira mullai said...

ஜெகஜ்ஜால ஜில்லாடி. இந்த ஜில்லா.. வலைத்தளத்துக்கு ராஜா. இந்தச் சின்ன கூஜா சொல்லுகிறது ஜே!!ஜே!! ஜமாய் ராஜா ஜமாய்!

Chitra said...

"ஏண்டிம்மா ஜானகி... " என்று அந்த ஜல் ஜல் வந்து கொண்டிருந்தது... ஜீவா அங்கிருந்து "ஜாலிலோ ஜிம்கானா" என்று பாடிக்கொண்டே ஜம்ப்பினான்.


.....நல்ல cha(ஜ)llenge .... க(ஜ)லக்கல்!

தினேஷ்குமார் said...

எச்சுச்மி கேன் ஐ ஹெல்ப் யு

ஒன்னும் முடியல சார்

நாவேனும்னா ஜே ஜே ஜே ஜே ஜே ஜே ஜே போடுறேன் நீங்க நடத்துங்க சார்

அப்பா கண்ண கட்டுதே
சார் ஜில்லுனு ஜிகிருதன்டா சாப்பிடுங்க சார் என்னது ஜி யா ..................

பத்மநாபன் said...

மோகன்ஜி அவர்களின் அழைப்பினை ஏற்று அப்பாஜி யே ஜே போடும் அளவுக்கு ஜோரா ஒரு கதை போட்டதுக்கு உங்களுக்கு ஒர் பெரிய ஜே.....

உங்களது உடனடி கற்பனை சக்திக்கும் ஒரு ஜே....

Anonymous said...

Jammunu irukku.

Raghu

அப்பாதுரை said...

ஜாம்பஜார் வரலியேனு பாத்தேன்... விடவில்லை நீங்கள். 'ஜே'னு எப்படி இரு எழுத்து எழுதுவது? ஜே ஜே?

இதைக்கூடத் திரித்த உங்கள் துணிச்சலைப் பாராட்ட வேண்டும்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கலக்கல்.

எல் கே said...

ஜமாச்சு இருக்கேள் போங்கோ

Anonymous said...

இந்த பாலாஜி உங்களுக்கு போடுறான் ஜே! ஜே!
ஜூப்பர் :)

R. Gopi said...

இதே மாதிரி இன்னும் நிறைய எழுதுங்க. உதாரணம் 'ஷ'.

நல்லா இருக்கு பதிவு!

ஸ்ரீராம். said...

ஜல்ஜல் ஜில்ஜில்...விடு ஜூட்...

ஸ்ரீராம். said...

ஜல்ஜல் ஜில்ஜில்...விடு ஜூட்...

சைவகொத்துப்பரோட்டா said...

ஜெய் ஹோ.

இளங்கோ said...

எத்தனை எத்தனை 'ஜா' க்கள்...
அண்ணனுக்கு ஜே ஜே :)

பத்மநாபன் said...

உயிரும் வேண்டாம் மெய்யும் வேண்டாம்... கிரந்தமே , ஜரந்தமே போதும் என்று ஜதிர் ஆடிவிட்டீர்...

ஜும்மா அடிச்சு விட்டேன்,
அப்பாஜி நெஜமாவே பாராட்டி விட்டாரே ....

பின்குறிப்பு ....ஜின்குறிப்பு ...

NaSo said...

உங்களுக்கு ஒரு ஜே போட்டுட்டேன். இல்ல இல்ல ஜே ஜே பொட்டுட்டேன். (இதுல உள்குத்து எதுவும் இல்லை)

RVS said...

@தக்குடுபாண்டி
சத்தமா கேக்காதீங்க. அவங்க காதில விழுந்திரப்போகுது... ஏற்கனவே கடுப்புல இருக்கா ஜோட்டால அடிச்சிரப் போறா.. (ஜ என்னை விட்டு போக மாட்டேங்குது...) ;-)

RVS said...

@ஆதிரா
//ஜெகஜ்ஜால ஜில்லாடி. இந்த ஜில்லா.. // அதென்ன புள்ளி புள்ளி... கேடின்னு அடிச்சுர வேண்டியதுதானே... பாராட்டுக்கு நன்றி ;-)

RVS said...

@Chitra
நன்றி ஜித்ரா ... ச்சே.. சித்ரா.. ;-)

RVS said...

@dineshkumar
உங்களோட ஜிங்கிள் கவிதைகள் சூப்பர். இது சும்மா ஜகஜஜ்கஜ.....

RVS said...

@பத்மநாபன்
ஜோரான பின்னூட்டதிற்கு ஒரு நன்றி பத்து ஜி ஜி ஜி ஜி ஜி ;-)

வெங்கட் நாகராஜ் said...

ஜப்பா, ஜகரத்துக்கு ஒரு ஜே போடுங்கப்பா. நான் ஜங்கார்ல ஒரு சுத்து போயிட்டு வரேன்.

RVS said...

@Raghu
ஜம்முக்கு ஒரு நன்றி ;-)

RVS said...

@அப்பாதுரை
ஜே ஜே வை நினைத்து எழுதியதை பாராட்டிய அப்பாஜி உங்களுக்கு ஒரு பெரிய ஜே ஜி!!! இனிமேல் ஜி வேண்டாம் என்று சொன்னால் பார்ட் டு ஜல்தியா ரெடி பண்ணிடறேன்..

sakthi said...

கற்பனைக்கு பாராட்டுக்கள் !!

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
கலக்கலுக்கு ஒரு நன்றி ;-)

RVS said...

@LK
மிக்க நன்றி ;-) ஜகரம் பட்ட பாடு... இல்ல... ;-)

RVS said...

@LK
மிக்க நன்றி ;-) ஜகரம் பட்ட பாடு... இல்ல... ;-)

RVS said...

@Balaji saravana
இந்த ஜகரம் உன்னுள் அடக்கம் பாலாஜி. ;-) பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@Gopi Ramamoorthy
உஷ்.. சத்தமா சொல்லாதீங்க.. உடனே எழுத வேண்டி வரும்..அப்புறம் இரவு முதல் மறுநாள் உஷத் காலம் வரை எழுத வேண்டி வரும். எல்லோரும் ஷாக் ஆயிடுவாங்க. பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
ஜில்லுன்னு ஒரு ஜகரம் ஸ்ரீராம். ;-)

RVS said...

@பத்மநாபன்
ஆமாம் இது கதை அதனால மெய் இல்லை.. உயிர் இல்லையா? அடுத்தது உயிரோட்டமா ஒரு கதை ட்ரை பண்றேன்...

//ஜின் குறிப்பு// நினைத்து நினைத்து வியக்கிறேன் பத்துஜி!! என்ன ஒரு சொல்வன்மை..... ;-)

நன்றி..

RVS said...

@சைவகொத்துப்பரோட்டா
பாராட்டுக்கு நன்றி. உங்க கடையில் இருந்து ஒரு ஜூஸ் அனுப்புங்க... (பாரடா... இன்னமும் ஜகரம் ஆடறான்.. ;-) )

RVS said...

@இளங்கோ
அடுத்தது ஷா எழுதணுமாம். கோபியின் விருப்பம். என்ன செய்யலாம்? ;-)

RVS said...

@நாகராஜசோழன் MA
ஜே ஜேன்னு சொல்லி வெளிக்குத்து குத்தினாலும் எனக்கு ஒன்னும் புரியாது.... ஜடமாட்டம் உட்கார்ந்திருப்பேன். (அப்பாடி இங்கயும் ஒரு ஜகரம் போட்டு தப்பிச்சாச்சு.. இழுத்து உள்ள உட்ருவாங்க போலருக்கே.. ) ;-)

RVS said...

@வெங்கட் நாகராஜ்
ஜங்கு ஜக்கர ஜாமி வந்து ஜிங்கு ஜிங்குன்னு ஆடி இதுமாதிரி ஜகாரம் எழுத உதவியது. தங்கள் பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@sakthi
நன்றி சக்தி. அடிக்கடி வாங்க.. ;-) நன்றி ;-)

இளங்கோ said...

நீங்க 'ஷா' la எழுதுனாலும் நான் 'ஜே ஜே' ன்னுதான் சொல்லுவேன் :)

ADHI VENKAT said...

ஜமாய்ச்சுட்டீங்க !!!!!. ஜகோ இல்ல இல்ல சகோ!!!!!!!!!!!!!!

T.S.VARADAN said...

இந்த கதையில என் பேரை விட்டுட்டாரேன்னு வேலூர் ஜலகண்டேஸ்வரர் விஷ்ணுகிட்ட புலம்ப, 'என்னையும்தான் சிவா'ன்னு அலுத்துகிட்டாராம் அந்த ஜலனாராயணன்!'

RVS said...

@இளங்கோ
அப்ப அடுத்த ஆட்டத்துக்கு ரெடி? நெஞ்சில் தில் உள்ள ஆசாமிப்பா நீங்க. ;-)

RVS said...

@கோவை2தில்லி
என்ஜாய் பண்ணி படித்ததற்கு நன்றி கோவை2தில்லி ;-) (இதிலும் ஜகரமா... நிறுத்தப்பா.. ) ;-)

RVS said...

@T.S.VARADAN
வரதன் சார்! ஜலம் கதை உள்ளே ஒத்து வரலை.. கொஞ்சம் பாடுபட்டா சேர்த்திருக்கலாம். அர்ஜெண்டா போட்டேனா விட்டுட்டேன். அதுக்காக ஜகமாளும் தெய்வங்களையே கமெண்ட் போட வச்சுட்டீங்களே!!! நன்றி ;-)

RVS said...

@ TO ALL
இந்த கமெண்ட் செக்ஷன்ல எவ்ளோ ஜகரம்டா..

உட்டுடுப்பா என்று பல ஜீக்கள் அலறுவது காதில் விழுகிறது..

கைக்கு ஜிப்பை போட்டுக்கட்டுமா? ;-)

;-)

மோகன்ஜி said...

ஜெகஜ்ஜோதி! ஜெகஜ்ஜோதி! ராக்ஷசா!!

RVS said...

@மோகன்ஜி
ரக்ஷித்து அருளியது நீங்கள் தானே ஜீ... .. ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails