Saturday, December 11, 2010

பாரதி : என் நெஞ்சில் நிறைந்தவை

இன்று (11/12/2010) பாரதியின் பிறந்த நாள். தமிழில் பாட்டெழுதியோ கவிதை எழுதியோ அவனுக்கு வணக்கம் சொல்ல நம்மால் முடியாது. வழக்கம் போல் படங்களிலும் கர்நாடக கச்சேரிகளிலும் கையில் கிடைத்த பாடல்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன்.  உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில்....

தீராத விளையாட்டு பிள்ளை
இந்த வலைப்பூவிற்காக பாரதியார் எழுதி சித்ரா பாடியது.



மனதில் உறுதி வேண்டும்
செம்படவன் அகமகிழ்ந்து பரிசு வழங்கி சிறப்பிக்கும் பாரதியார்-பாலச்சந்தர்-இளையராஜா கூட்டணியின் கடலோர அமர்க்களம்.





நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி 
சின்ன வயது அமலாவும் மீசை இல்லாத ரகுமானும் (இப்போ ரகு) சேர்ந்து ஆடிக் களித்த பாரதி.



சுட்டும் விழிச் சுடர் தான்
ஹரியின் குரலை முதலாக வைத்து வாத்தியங்கள் அதிகம் இல்லாமல் ரஹ்மான் போட்ட மியூசிக். ராஜீவ் மேனனின் காட்சியமைப்பில் பாரதியின் பாடல்.



நல்லதோர் வீணை செய்தே
மற்றுமொரு பாலச்சந்தர் பிரயோகித்த பாரதி பாடல். இம்முறை எம்.எஸ்.வி.



காற்று வெளியிடை கண்ணம்மா
 நமது வயதான தோழர்களுக்காக இந்தப் கருப்பு வெள்ளை  பாடல். பாரதி தமிழுக்கு என்ன கருப்பு வெள்ளை?


வீணையடி நீ எனக்கு 
மேவும் விரல் நான் உனக்கு. பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு. காதல் சொட்ட சொட்ட பாரதியின் மற்றுமொரு படைப்பு. ஜேசுதாசின் குரலில்.



வில்லினை ஒத்த புருவமும் 

நித்யஸ்ரீ பாடிய காவடி சிந்து. ஒரு கர்நாடக கலக்கல்.


அக்கினி குஞ்சொன்று கண்டேன் 
புரட்சிக் கவிஞராய் பாரதி.


காக்கை சிறகினிலே நந்தலாலா
பார்க்கும் மரங்கள் கேட்கும் ஒலிகள் எல்லாம்.. எல்லாம்... நந்தலாலா...  


எனது தேர்வை ரசித்தமைக்கு நன்றி.

-

50 comments:

nis said...

பாரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

மோகன்ஜி said...

என் பாட்டனுக்கு பாமாலை
சூட் டியிருக்கிரீர்கள். பாடல்கள் நல்ல தேர்வு. இதை அடிக்கடி கேட்பேன் இனி..
வாழ்த்துக்கள் ஆர்.வீ.எஸ்!

தினேஷ்குமார் said...

தமிழுக்கு முதல் வணக்கம்

பாட்டெழுத
முடியாதென்று
பட்டியல்
தொகுத்தீரே
தமிழ் தீ
மகாகவி புகழ்பாட
தனியாத
தமிழ் தீயாய்
எம்முள்ளும் அவரே
உலகெங்கும்
தமிழ் கடவுளாய்............

ஸ்ரீராம். said...

நல்ல பாடல்கள். அருமையான தெரிவு. உங்கள் ப்ளாக்குக்காக பாடிய சித்ராவுக்கு பாராட்டுக்கள்! காக்கைச் சிறகினிலே திருமால் பெருமை படப் பாடல், சுட்டும் விழிச் சுடர்தான் பி சுசீலா குரலில் மலர்கின்ற பருவத்திலே படத்தில் வரும் பாடல், கேட்டிருக்கிறீர்களோ? (சுட்டும் விழிச் சுடர்தான் பாடல் எம் கே டி பாகவதர் குரலில் கூட இருக்கிறது)

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பத்மநாபன் said...

என்னா அதிர்வெண் ஒற்றுமை .நானும் மகாகவியை வணங்கி ஒரு பதிவு போட்டுள்ளேன்...உங்க வலைப்பூவிற்காக மகாநதி ஷோபனாவை பாட வச்சு போட்டிருக்கோம்ல..

கலெக்‌ஷன் பண்ணி போடறதில ..தீ.வி.பி, தீ.வி.பி தானே..

பாரதியை போற்றுவோம்..

RVS said...

@nis
உங்களோட நானும் சேர்ந்து வாழ்த்து கோஷம் போட்டுக்கறேன்.. ;-)

RVS said...

@மோகன்ஜி
நன்றி மோகன் அண்ணா!! ;-)

RVS said...

@dineshkumar
கவிதைக்கு நன்றி தினேஷ்... ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நீங்கள் சொன்ன எம்.கே.டி பாகவதர் பாட்டு தெரியாது.... (யூத்து...யூத்து..)
கருத்துக்கு நன்றி சார்! ;-)

Anonymous said...

Just now read an article in Dinamani regarding VOC and Bharathi., and turned on to your blog, I am delighted to see this..

Song selections are super and I would have been delighted had there been 'Velli Pani malaiyil' song. (Cannot forget the beaming VOC (Sivaji) in that song with natural pride)

In my early morning discussion with my son, I narrated Bharathi's Panchali sabatham - the one stanza attributing to the Bheema's and Panchali's vows (Om Devi parasakthi aanai....). I was explaining him how my Tamil Master narrated the portion with action.

Can you help me how to reply in Tamil., it is a torture to tyoe tamil alphabets in English.

Good post as usual.

Raghu

Aathira mullai said...

”மீசை நரைக்கும் முன்னே மூச்சின் ஓசையை நிறுத்திக்கொண்டான்
மீசையிலும் வெள்ளையனின் ஆட்சி வரக்கூடாதென்று”

அவனுடைய துடிப்புகளே இன்றும் தமிழர்களை துடித்து எழ வைத்துகொண்டிருக்கும் இப்பாடல்கள்... நல்ல பகிர்வுக்கு நன்றி RVS.

நானும் இது போன்றதொரு பதிவை ஈகரைத் தமிழ் களஞ்சியத்தில் இட்டுள்ளேன். லிங்க் கொடுத்துள்ளேன் முடிந்தால் பார்வையிடவும்.

http://www.eegarai.net/-f22/-t45521.htm

RVS said...

@Raghu
ரகு சார்! கீழ் கண்ட சைட்டுக்கு போங்க.. தமிழ இங்கிலிஷ்ல அடிங்க.. அது தமிழ்ல கொடுத்துரும். அப்புறம் காப்பி பண்ணி பேஸ்ட் செய்ய வேண்டியதுதான். ட்ரை பண்ணி பாருங்க. இதுக்கு முன்னாடி சாப்பாடு பற்றி ஒன்னு போட்ருக்கேன் பாருங்க. அதுவும் உங்களுக்கு பிடிக்கும்.
இன்னும் ஐந்தாறு பாடல்கள் என் லிஸ்டில் இருக்கு. நீங்கள் சொன்னதும் தான். ரொம்ப பெரிசா ஆனா நிறைய பேரால என் சைட்ட தொறக்க முடியாம போய்டும். அதனாலதான்...

தமிழில் கமெண்ட்ட http://www.google.com/transliterate/tamil

RVS said...

@ஆதிரா
//”மீசை நரைக்கும் முன்னே மூச்சின் ஓசையை நிறுத்திக்கொண்டான்
மீசையிலும் வெள்ளையனின் ஆட்சி வரக்கூடாதென்று”//
அட்டகாசம் போங்க.. பாரதி வார்த்தை கேட்டவுடனே பொங்குது தமிழ். நன்றி ;-)
ஈகரை பார்த்தேன். நிறைய பாடல்கள் சேமா போட்ருக்கோம். அது ரொம்ப நாள் முன்னாடி பதிஞ்சது. சரியா?

ADHI VENKAT said...

பாடல்களின் தேர்வு அருமை. நீங்கள் ஒரு சகலகலா ரசிகன் என்று நினைக்கிறேன் சகோ. நேற்று வயிற்றுக்கு, இன்று செவிக்கு விருந்து.

புவனேஸ்வரி ராமநாதன் said...

காளியிடம் காணி நிலம் கேட்டவன் தன் ஆயுளையும் சற்று அதிகப் படுத்திக் கேட்டிருக்கலாம். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பாடல்களை நம் பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்து எதிர்கால சந்ததியினருக்கும் பாரதியின் அருமையினை தெரியவைப்போம். அருமையான பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@கோவை2தில்லி
வயிற்றுக்கு உணவில்லாத போது சிறிது செவிக்கும் ஈயப்படும் என்று மாற்றிப்போட்டு தான் முதலில் ஆரம்பிப்பதாக இருந்தேன். அப்புறம் மாற்றிவிட்டேன். பாராட்டுக்கு நன்றி. ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
சக்தி உபாசகன் பாரதி. ஆதிரா இட்ட பின்னூட்டத்தை பாருங்களேன்.
கருத்துக்கு நன்றி ;-)

RVS said...

@பத்மநாபன்
வாத்தியார், பாரதி.. இப்படி நமக்கு எப்போதுமே ரசிக அலைவரிசை ஒன்றுதானே பத்துஜி!
எனக்காக ஷோபனா கச்சேரி உங்க சைட்ல ஏற்பாடு பண்ணினதுக்கு நன்றி. அந்தக் கச்சேரியும் நன்றாக இருந்தது. நன்றி ;-)

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஆதிரா அவர்களின் பின்னூட்டை பார்த்தேன். என்ன சொல்வது, அற்புதம்.

சிவராம்குமார் said...

அருமையான தொகுப்பு RVS!

RVS said...

@சிவா என்கிற சிவராம்குமார்
நன்றி ;-)

Aathira mullai said...

//”மீசை நரைக்கும் முன்னே மூச்சின் ஓசையை நிறுத்திக்கொண்டான்
மீசையிலும் வெள்ளையனின் ஆட்சி வரக்கூடாதென்று”//
அட்டகாசம் போங்க.. பாரதி வார்த்தை கேட்டவுடனே பொங்குது தமிழ். நன்றி ;-)//

இந்தக் கவிதையும் முன்னாலேயே எழுதி என்னோட பிளக்ல பதிஞ்சது RVS.

//ஈகரை பார்த்தேன். நிறைய பாடல்கள் சேமா போட்ருக்கோம். அது ரொம்ப நாள் முன்னாடி பதிஞ்சது. சரியா?//


ஆமாம். ரொம்ப நாள் முன்னாடியே பாரதியார் பாட்டுக்கள்.. பாரதிதாச்ன் பாட்டுக்கள் கண்ணன் கீதங்கள் எல்லாம் பதிவு பண்ணி இருக்கிறேன். அரிய பாடல்கள் கிடைத்தால் இன்னும் தொடர்ந்து கொண்டும் இருக்கிறேன்.. அங்கு நான் தலைமை நடத்துநர். முடிந்தால் அங்கும் உங்கள் பதிவுகளைத் தரலாம்.

Aathira mullai said...

பாரதி.. பார் அதி என்று நம்மைப் அதிசயத்தில் மூழ்கடிக்கும் சாலக்காரன் அல்லவா.. மிக்க நன்றி புவனேஷ்வரி ராமநாதன்.
உண்மையில் கலைவாணி நல்லதோர் வீணை செய்து நலங்கெட பூமியில் எரிந்தவளே...

balutanjore said...

dear rvs

thanks for the excellent collection

amam pure karnatic music ketpela?

naan thiruvaiyaru bakthan

balu vellore

RVS said...

@balutanjore
பாலு சார்! என்னுடைய பாடல்களின் பெட்டகத்தில் சினிமா மற்றும் கர்நாடிக் இரண்டும் சரிசமாக இடம் பெற்றிருக்கிறது. என்னுடைய பழைய பதிவுகளில் சில நல்ல கர்நாடிக் பாடல்கள் போட்டுள்ளேன். பார்த்தீர்களா? ;-)

Sathish said...

இந்த பாடல்களை உங்கள் தொகுப்பில் இணைத்துகொள்ளுங்கள்...

வெள்ளிபனிமலை...
http://www.youtube.com/watch?v=27IdJ4o71KQ&feature=related

சிந்து நதியின் மிசை...
http://www.youtube.com/watch?v=rJW7XDLhnLA

சிவகுமாரன் said...

பாரதியின் பாடல்கள் என்னைப் பொறுத்தவரை நெஞ்சில் நிறைந்தவை என்பதைக் காட்டிலும் நெஞ்சில் அறைந்தவை.
மிக அருமையான சேமித்துக் கொள்ள வேண்டிய தொகுப்பு நன்றி. .

ஹேமா said...

பாரதி பாடல்கள் எத்தனை கேட்டாலும் அலுக்காது.நன்றி ஆர்.வி.எஸ்.நினைவுகொள்வோம்.
ஆனால் அவர் இன்று இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரோ !

பத்மநாபன் said...

வலைநியதிப்படி இன்னைக்கு சூப்பர் ஸ்டார் பதிவு ஒன்னு ஆர்.வி.ஸ் போட்டாகனுமே....

தக்குடு said...

பாரதியாருக்காக மொட்டையே போட்டவன் இந்த தக்குடு! முழு விவரம் தனி பதிவா போடறேன்..:)

இளங்கோ said...

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா..

நெஞ்சிலும் மனதிலும் நிறைந்த வரிகள்.

நன்றிகள் அண்ணா.

RVS said...

@Sathish
நன்றி சதீஷ். ;-)

RVS said...

@சிவகுமாரன்
//நெஞ்சில் அறைந்தவை.// நிதர்சனமான உண்மை. தொகுப்பை பாராட்டியதர்க்கு நன்றி. ;-)

RVS said...

@ஹேமா
பாரதி யாருக்கும் பயப்படாதன். இன்று இருந்தால் கூட பாரதி பாரதியாகவே இருந்திருப்பான். ;-)

RVS said...

@பத்மநாபன்
உசுப்பி விட்டுட்டீங்களே பத்துஜி! ரஜினி படத்திலிருந்து சினிமா பாட்டு போடாம வித்தியாசமா ஏதாவது முயற்சி பண்றேன். ;-)

RVS said...

@தக்குடுபாண்டி
தயவு செய்து "மொட்டை" போட்டோவுடன் பதிவு போடவும். ;-)

RVS said...

@இளங்கோ
பாரதியிடம் இருந்து புறப்பட்ட அனைத்து தமிழ் வார்த்தைகளும் அமர்க்களம் தான். ;-)

கோமதி அரசு said...

நீங்கள் அளித்த பாரதியின் பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கு.

அருமையான தேர்வு.

RVS said...

@கோமதி அரசு
பாராட்டுக்கு நன்றி. முதல் வரவு என்று நினைக்கிறேன். அடிக்கடி வாங்க. நன்றி ;-)

மாதேவி said...

சித்ராவின் பாடல் அருமை.

பொன் மாலை பொழுது said...

ஊரில் இல்லை வரத்தாமதமாகியது . மீசைக்கவியின் திரைப்பட பாடல் தொகுப்புக்கள் அழகு அருமை RVS.
அக்கினி குஞ்சொன்று கண்டேன் மட்டும் உடலை முறுக்கேற்றி
எழுந்து நம்மையும் உடன் ஆட வைக்கும் உயிர் கவிதை.

தீராதவிளையாட்டு பிள்ளை
தூண்டில் புழுவினைப்போல்
ஆடுவோமே பல்லு பாடுவோமே
கண்ணன் மன நிலையை தங்கமே தங்கம்

என்று நிறைய உள்ளன.
கப்பலோட்டிய தமிழன், ஏழாவது மனிதன் போன்ற படங்களில் பாரதியின் கவி மட்டுமே பாட்டை ஒலிக்குமே!
பகிவுக்கு நன்றி.

RVS said...

@மாதேவி
அந்த ஆல்பத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையாய் இருக்கும். நன்றி ;-)

RVS said...

@கக்கு - மாணிக்கம்
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.... அக்கினி குஞ்சொன்று கண்டேன்... பாடலும்.. அதற்க்கு நடனமும்... ராஜாவின் இசையும்.... யேசுதாஸின் குரலும்.. என்னை எப்போதுமே மயங்கவைப்பவை...
கருத்துக்கு நன்றி மாணிக்கம். ;-)

சாய்ராம் கோபாலன் said...

பாடல்கள் நல்ல தேர்வு.

RVS said...

@சாய்
நன்றி சாய்! சாமி எப்போ மலைக்கு? ;-)

அப்பாதுரை said...

எங்கெங்கு காணிலும் பாரதி!
ஒரு பாட்டு கூட தளமிறங்கவில்லையே RVS? (வயசானவங்க பாட்டா? என்னா நக்கலுயா! மிச்சதெல்லாம் என்ன, தாலாட்டா?)

ஆதிராவின் 'மீசை' கமெந்ட் அட்டகாசம். நினைத்து நினைத்து ரசித்தேன்.

தக்குடு பாண்டி: மொட்டையடிச்சுண்ட விவரம் சொல்லுங்கோ சித்த.

அப்பாதுரை said...

"பாட்டனுக்குப் பாமாலை"
ஆகா - மோகன்ஜி.

சாய்ராம் கோபாலன் said...

//RVS said... நன்றி சாய்! சாமி எப்போ மலைக்கு? ;-)//

ஜனவரி பதிமூன்று இங்கே பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் இருமுடி கட்டு. அன்று இரவு மேரிலாந்து பயணம். அடுத்தநாள் (பொங்கல் அன்று) மேரிலாந்தில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் பதினெட்டு படி ஏறுவது, நெய் அபிஷேகம் எல்லாம். அன்று சாயங்காலம் நியூ ஜெர்சியில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் கோவிலில் மறுபடியும் மண்டல பூஜை

இன்று குளிர் மைனஸ் 9 டிகிரி ! கொஞ்சம் கஷ்டம் தான் ! எப்போதும் ஐயப்பன் கடைசி இரண்டு நாள் எதாவது நல்வழி காண்பிப்பார். பார்ப்போம் இந்த முறை என்னவென்று

வெங்கடேசன்.செ. said...

அற்புதமான தொகுப்பு சகோ. இன்னும் பல நாட்கள் காலையில் இத்தொகுப்பில் கேட்டு மகிழ்வது உறுதி.

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails