Saturday, December 18, 2010

பெருமாளே!!

sorgavasal parthasarathy
ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு என்பது ஒரு கோலாகல வைபவம் என்று என்னுடைய மன்னார்குடி டேஸில் எழுதியிருந்தேன். ஒரு முன்னூறு மைல் தாண்டி பஞ்சம் பிழைக்க சென்னை வந்தப்புறம் ஏகாதசி துவாதசி என்று பார்ப்பதற்கு நாளும் இல்லை கிழமையும் இல்லை நேரமும் இல்லை கோயிலும் இல்லை. இல்லை இல்லை எதுவுமே இல்லை. நம்ம பேட்டைப் பக்கம் உஷத் காலத்தில் யானை பிளிறி சொர்க்க வாசல் இருக்கும் திறக்கும் பெருமாள் கோயில் எதுவும் இல்லை. கூரைப் பந்தல் போட்டு தடுப்பு வைத்து சொர்க்கவாசல் திறக்கிறார்கள். பரமபத வாசல் என்று பதாகை வைத்தால் தான் நமக்கு அதுதான் பெருமாள் ஏளப் பண்ணப்போகும் இடம் என்றே தெரிகிறது.  இதில் ஒன்றும் பெரிய மஜா இல்லை. சரி மரீனா ஓரம் அல்லிக்கேணியில் பார்த்தனுக்கு ரதமோட்டிய உயர்திரு உலகமகா டிரைவர் மீசை வைத்த பெருமாள் பக்கம் போகலாம் என்றால் சமீபத்திய மழை எங்களை சென்னையிலிருந்து ஒட்டுமொத்தமாக பஞ்சாயத்து தீர்ப்பு வழங்கி ஊரை விட்டு ஒதுக்கிவைத்து விட்டது. பெருமழை ஏற்ப்படுத்திய குண்டு குழிகளால் நாங்கள் அமேரிக்கா ஐரோப்பா போன்று ஒரு தனி கண்டத்தில் வாழ்வது போல இருக்கிறது. ஆபீசில் ஒரு சிறப்பு விடுப்பு கொடுத்திருந்தால் வண்டி கட்டிக் கொண்டு பார்த்தசாரதியை தரிசித்திருக்கலாம். அந்த கொடுப்பினை இல்லாததால் "விடு ஜூட்" என்று அனுதினமும் குப்பை கொட்டும் இடத்திற்கு வழக்கத்தை விட அரை மணி முன்னால் ஆஜராகிவிட்டேன்.

சாயந்திரம் நிச்சயம் ஏதாவது ஒரு பெருமாள் கோயிலுக்கு சென்று அட்டெண்டன்ஸ் கொடுத்து "உளேன் ஐயா.. சரணம் புகுந்தேன்... அடியேனை காப்பாற்றும் ஸ்வாமி..." என்று உம்மாச்சியிடம் தண்டம் சமர்ப்பித்தது விஞ்ஞாபனம் செய்து வேண்டிக்கொள்ள வேண்டும் என்ற மனைவியின் 'உந்து'தலால் பணியிடத்தில் துறைத் தலைவரிடம் அனுமதி பெற்று என்றைக்கும் இல்லாத திருநாளாய் காரில் தலை விளக்கு போடாமல் சூரியன் தன் விளக்கடிக்கும் பணியில் இருக்கும் போதே வீடு வந்து சேர்ந்தேன். பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு முதலில் லக்ஷ்மி ஹயக்ரீவர் கோயிலுக்கு விரைந்தேன். ஒரு நீளமான தெரு தாண்டி அடுத்த தெருவில் இருக்கும் டீக்கடை வாசலில் தம் அடித்துக் கொண்டிருக்கும் இளைஞருக்கு அப்புறம் அங்கவஸ்த்திரத்தால் மூக்கை மறைத்து ஒரு வடகலை மாமா நின்றிருந்தார். அவர் பின்னால் அவர் ஆத்துக்காரியும் அதற்க்குப் பின்னால் மத்திம வயது பக்தர் ஒருவர் சடாரென்று வீட்டு வாசலில் நின்றிருந்த அந்த லங்கையை எரித்த அனுமன் வால் வரிசையில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். நடுவில் யாராவது வந்து புகுந்து தன் இடத்திற்கு பங்கம் வந்துவிடப் போகிறதே என்று ஒருவரோடு ஒருவர் அணைத்துக் கொண்டு நின்றனர். மார்கழிக் குளிர் கூட காரணமாக இருக்கலாம். தெரியவில்லை. அந்த வால் பகுதியில் நின்றால் கியூ நகரும் வேகம், கோவில் இருக்கும் தூரம் போன்றவற்றை தன் கண்ணாலேயே அளந்து "இன்னும் ஒரு மணி நேரம் கழித்து நாம ஸ்வாமி பாப்போம்" என்று கணிதம் இளங்கலை பட்டம் படித்த என் மனையாள் சொன்னதும் "ஐயய்யோ.. என்னால முடியாது.... அப்பா போலாம் வாப்பா.." என்று கோரஸாக என் இரண்டு பென்னரசிகளும் பாடினார்கள்.

ஆர்.டி.ஓ ஆபிஸில் எட்டுப் போடுவது போல சரசரவென்று திருப்பி பக்கத்தில் அடுத்த பெருமாள் கோயில் எங்கிருக்கிறது என்று யோசித்துக்கொண்டே திரும்பினேன். பாய்ஸ் பட செந்தில் கபாலி குளக்கரையில் உட்கார்ந்து கொண்டு சிரித்துக்கொண்டே Information is Wealth சொன்னது அநியாயத்திற்கு நியாபகம் வந்தது. உடனே மூளையை திருகியதும் அது பக்கத்தில் ஒரு லக்ஷ்மி நரசிம்மர் கோயில் இருப்பதை வெளிச்சம் போட்டு காண்பித்தது. கோயிலுக்கு அருகில் வண்டி நிறுத்தமுடியாதலால் ஒரு தெரு தள்ளியே நிறுத்திவிட்டு பொடிநடையாக கோவிலுக்கு சென்றோம். ரொம்ப கூட்டம் இல்லை. ஆனால் கோயில் இருக்கும் தெருவின் இருபுறமும் முழுக்க முழுக்க பாதரட்சைகளின் பாற்கடல். பல இடங்களில் செருப்பை தொலைத்து பொண்டாட்டியிடம் வசவும் அடியும் வாங்கிய புண்ணியவான் ஒருவர் தன் செருப்பு மேல் தூக்கி மற்றவர் தலையில் போடும் அளவிற்கு இருக்கும் ஒரு கருங்கல்லை பாதுகாப்பாக வைத்துவிட்டு போயிருந்தார். செருப்பு ஒன்றும் அவ்வளவு உசத்தி கூட கிடையாது. செருப்பு தொலைந்து போனால் வியாதி பீடிக்காது என்று என்னை பலமுறை என் வீட்டில் தேற்றியிருக்கிரார்கள்.

எங்கள் நாலு ஜோடியையும் இணை பிரியாமல் நிறைய செருப்பு இருக்கும் ஓரிடத்தில் சங்கமித்தோம். கையில் அகல் விளக்கோடு ஒரு குடும்ப தலைவி அங்கே வரிசை இருக்கிறது என்பதைக் கூட சட்டை செய்யாமல் தன் புருஷனிடம் "என் பின்னாடியே வாங்க.. விளக்குக்கு குயூ கடயாது.." என்று சாமர்த்தியமாக "ஹை..ஹை.." சொல்லாமால் அவரை ஓட்டிக்கொண்டு போனார். வரிசையில் முன்னால் நின்ற ஒரு இந்தியன் தாத்தா வரிசையின் விதிகளை சொல்லி இரைந்தார். லட்சியம் செய்தால் தானே. "சினிமாவுக்கு போனால் எவ்ளோ நேரம் வரிசையில் நிப்பாங்க..." என்ற நூறு கோடி இந்தியரின் வசனத்தை அவர் ரிப்பீட் செய்ததற்கு "இப்பெல்லாம் நெட்ல புக் பண்றாங்க.." என்று சொல்லி கட்டிளங்காளை ஒருவன் அவர் வயத்தெரிச்சலை கொட்டிக்கொண்டான். "என்ன எழவோ.." என்று கோயிலுக்குள் சொல்லி பாவத்தை கட்டிக்கொண்டார்.

வைகுண்ட ஏகாதசியில் ஊரில் எல்லாப் பெருமாள் கோயிலும் திருப்பதி ஆகிவிட்டது. ஜருகண்டி சொல்லாமல் "நகருங்க... பார்த்துக்கிட்டே போங்க சார்..." என்று கையை இழுத்து வெளியே தள்ளாத குறையாக பக்தியோடு விரட்டினார்கள். லக்ஷ்மி நரசிம்மரை பார்த்த திருப்தியோடு வெளியே நகரும்போது சொர்க்க வாசல் இல்லாத அந்தக் கோயிலின் வாசற்ப் படியில் "சொர்க்கத்தின் வாசல் படி" என்று ஏகாதசி புண்ணிய காலத்தில் சிரத்தையாக ஃபிகர் வெட்டிக்கொண்டு நின்றான். மனைவியிடம் இந்தக் காட்சியை பார்க்கச்சொல்லி தேவையில்லாமல் நான் ஒரு வெட்டு வாங்கிக்கொண்டேன். வாய் வெட்டுதான். துவஜஸ்தம்பம் அருகில் தெண்டம் சமர்பித்த பின்னர் கண் கட்டுப்பாடின்றி அந்தப் பக்கம் பார்த்தபோது பார்த்த விழி பார்த்தபடி குணா ஸ்டைலில் அங்கேயே நின்றிருந்தான் அந்த அனானி. இதற்க்கு மேல் அநாகரீகமாக பார்க்கூடாது என்று செருப்பு விட்ட இடத்தில் இருக்குமா என்று கோயிலுக்கு வரும் அனேக பக்தர்களுக்கு ஏற்படும் பயத்தில் வேகவேகமாக கோபுரம் தாண்டி வெளியே வந்தேன். ஒரு இரண்டு சக்கரக்காரர் வண்டியேற்றி செருப்பில் மண் தடவி வைத்திருந்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் தேமேன்னு போட்டுக்கொண்டு கோபுரத்தை பார்த்து எல்லோரும் செய்வது போல தாவாங்கட்டையில் வலது கையால் போட்டுக்கொண்டு கிளம்பினேன்.

பசுமாட்டிற்கு ஏகாதசி அன்று அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியமாம். துளசி பூவைவிட நோஞ்சான் அகத்திக்கீரை கட்டுகளை அடுக்கி வைத்து விற்றார்கள். கூடவே கடைபோட்ட விஷயாதி அவர் வீட்டு பசுமாட்டையும் பக்கத்தில் கட்டியிருந்தார். வியாரத்திற்கு வியாபாரம் மாட்டுக்கு தீனியும் ஆயிற்று. எங்கிருந்தோ வந்த காளை மாடு போட்டிபோட்டுக்கொண்டு தலையை முட்டுவது போல ஆட்டி அந்த பசுவிற்கு வரும் தீனியையும் கலைத்துக்கொண்டிருந்தது. நாட்டில் நம் மக்கள் செய்வதைத் தான் அந்தக் காளை மாடும் செய்கிறது என்று நினைத்துக்கொண்டு மனதிற்குள் "பெருமாளே.. எல்லோரையும் காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

பின் குறிப்பு: சினிமாப் பாட்டு போட்டால் இந்தப் பதிவு நீர்த்து விடும். ஆனால் போடாமலும் இருக்க முடியவில்லை. அதனால் சொர்க்கத்தின் வாசற்ப் படி யூட்டி சுட்டியை கொடுத்துவிட்டேன். காதலர்கள் அனுபவிப்பீர்களாக! தங்கமணிகளுக்கும் ரங்கமணிகளுக்கும் தான். இன்று ஸ்திர வாரம். சனிக்கிழமை. இந்தப் பெருமாளே பதிவு படிப்பவர்கள் சகல நலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள். நன்றி.

பட உதவி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளின் படம் கிடைத்த இடம் www.dinamani.com

-

42 comments:

பொன் மாலை பொழுது said...

பிரசாதம் ஒன்னும் கிடயாதொண்ணோ? சமத்துதான் போ.
அலங்கார பிரியராக வரும் பெருமாள் படம் எங்கு எடுத்தது ?
நண்னாத்தான் இருக்கு அம்பி.

புவனேஸ்வரி ராமநாதன் said...

கோயிலுக்குச் சென்று வந்ததைக் கூட இவ்ளோ சுவாரசியமா சொல்ல முடியுமா. நல்லாயிருக்கு, மதுரைக் கோயில் பதிவு போலவே.

பனித்துளி சங்கர் said...

ரசிக்கும் வகையில் மிகவும் நேர்த்தியா நடையில் விவரித்து இருப்பது சிறப்பு . புகைப்படம் அழகு

ADHI VENKAT said...

பெருமாளை நன்றாக சேவிச்சேளா? பகிர்வுக்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

பெருமாள் சேவை.. பார்க்க அழகு
உனது பதிவோ, படிக்க அழகு.
எனது பின்னூட்டமோ அழகோ அழகு.

-- சத்தியமா இது கவிதை இல்லை.. இல்லை.. இல்லை..

(are u trying for US visa.. puzzling ? that shud be 300 km.. not miles)

Anonymous said...

ஏகாதசி உங்களுக்கு "ஏக் தம்"மில் கடந்து போயிருச்சு ;)
நீங்க பெற்ற அருளாசிய எங்களுக்கும் திருப்பி விட்டதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி :)

மாதேவி said...

இப்படிக் கோயில் தர்சனம் செய்தால் பெருமாள் எப்படிக் காப்பாற்றுவார் :))

சுவாரஸ்யமான வைகுண்ட ஏகாதசி்.

ஸ்ரீராம். said...

//"எங்கள் நாலு ஜோடியையும் இணை பிரியாமல் நிறைய செருப்பு இருக்கும் ஓரிடத்தில் சங்கமித்தோம்"//

//"நாட்டில் நம் மக்கள் செய்வதைத் தான் அந்தக் காளை மாடும் செய்கிறது என்று நினைத்துக்கொண்டு மனதிற்குள் "பெருமாளே.. எல்லோரையும் காப்பாற்று" என்று வேண்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்..."//

அப்போ அவங்க....விட்டுட்டு வந்துட்டீங்களா...கோவிலிலேயே இருக்காங்களா...

எல் கே said...

சென்னை வந்தப்புறம் இதை மறந்தாச்சு... சேலத்தில் இருந்தப்ப போனது அவ்வளவுதான் . பகிர்வுக்கு நன்று

சின்னப் பையன் said...

ஆஹா. நங்கநல்லூர்தான் தங்கள் இருப்பிடமா? அடியேனும் அவ்விடம்தான்..

Anonymous said...

நல்ல பதிவு. சாதாரணமாக யாராவது யாத்திரை சென்று வந்தால் அவர்களைப் பார்ப்பது வழக்கம். அப்போதாவது கொஞ்சம் புண்ணியம் ஒட்டிக்கொள்ளும் என்று நம்பிக்கை. அது போல் யாராவது வைகுண்ட ஏகாதசி தரிசனம் செய்தவர்கள் ப்ளாக் எழுதினால் உடனே படிப்பதுண்டு. இதுவும் ஒரு நம்பிக்கை.

உங்கள் புண்ணியத்தில் எனக்கும் கொஞ்சன் புண்ணியம்.

// செருப்பு தொலைந்து போனால் வியாதி பீடிக்காது // இது போல் நிறைய சொல்வதுண்டு -- மாதிரிக்கு (டைப் செய்யும்போது மாதுரிக்கு என்று வந்தது, திருத்தினேன்)

- துணி தொலைந்தால் பீடை விட்டது,
பெருங்காயம் கடித்தால் பிள்ளை பிறக்கும்,
துணியை மாற்றி கட்டிக் கொண்டால் புதுசு கிடைக்கும்..... இன்னும் நிறைய.

ரகு

RVS said...

@கக்கு - மாணிக்கம்
நோ பிரசாதம்! ஒன்லி தரிசனம் தான் மாணிக்கம். பக்தர் கூட்டம் ஜாஸ்தி ;-)

RVS said...

@புவனேஸ்வரி ராமநாதன்
மதுரைப் பதிவை இன்னமும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? நன்றி ;-)

RVS said...

@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
பாராட்டுக்கு மிக்க நன்றி சங்கர். ;-)

RVS said...

@கோவை2தில்லி
திவ்யமான தரிசனம். பாராட்டுக்கு நன்றி ;-)

RVS said...

@Madhavan Srinivasagopalan
அழகாத்தான் இருக்கு மாதாவா.. நன்றி ;-)

RVS said...

@Balaji saravana
நன்றி. நான் பெற்ற அருளாசி எப்போதும் உங்களுக்கு உண்டு. ;-)

RVS said...

@மாதேவி
மனதில் நினைத்தாலே வந்து பக்தர்களை காப்பாற்றுவார். ;-) நன்றி ;-)

RVS said...

@ஸ்ரீராம்.
நான் வேண்டிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அவர்கள் என் கூட வண்டியில் ஏறி வந்துவிட்டார்கள். (மனைவி மக்களுடன் வீடு வந்து சேர்ந்தேன் என்று முடிக்க பிடிக்கவில்லை.) பாயிண்ட்டாக கேட்டதற்கு மிக்க நன்றி ஸ்ரீராம். ;-)

RVS said...

@LK
வேலை...வேலை..வேலை.. இதுதான் சென்னை வாழ்க்கை.. வேறெதுவும் இல்லை. சரியா எல்.கே. ;-)

RVS said...

@ச்சின்னப் பையன்
பக்கத்துலதான்... அதென்ன ச்சின்னப் பையன்? சைட்ல போய் பார்த்த பெரிய விஷயம் எல்லாம் இருக்கு... முதல் வருகைக்கு நன்றி ;-)

RVS said...

@ரகு
சார்! நல்ல நம்பிக்கை வைத்துள்ளீர்கள்!! நீங்கள் சொன்ன உதாரணங்களும் என் பாட்டி சொல்லுவாள். நன்றி ;-)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பரவாயில்லையே.. நீங்கள் கோவிலுக்குப் போய் வந்து விட்டீர்கள்.
வைகுண்ட ஏகாதசி..பக்கத்தில் ஸ்ரீரங்கம்.. ரயில்வே ஸ்டேஷன் ..பக்கத்தில் வீடு இருப்பவன் ரயிலை கோட்டை விடுவது போல், நான் கோவிலை கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறேன்!

Aathira mullai said...

சொர்க்கத்தின் வாசல் படின்னு பார்த்ததும், கைக்கெட்டிய தூரத்துல இருக்கே.. படத்திலயாவது கைகளால தொட்டுக் கும்பிட்டு கண்ணுல ஒத்தி வச்சுக்கலாம்னும் மெளசை கிளிக்கினா இது என்ன கொடுமை.. சிமிமாப்பாட்டைப் போட்டு ஏமாத்திட்டீங்க..

பத்மநாபன் said...

சொர்க்க வாசல் திறந்தவுடன் வரும் முந்தி அடிக்கும் கூட்டம் போல் , சர சர வென்று அனுபவங்கள் வார்த்தைகளாக கிடைத்த பதிவு... ஒரு சின்ன டிட்டெயில் கூட விடாம எப்படித்தான் எடுக்கிறிங்களோ ...ஆச்சர்யம் தான்...

சென்ற முறைக்கு சென்றமுறை அல்லிகேணி பார்த்தசாரதியை தரிசித்தேன்..பாரதியின் நினவு தானாக வந்தது. மீசையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஹை....ஹை .... சரியான கலாய்ப்பு.... சொந்த அனுபவமும் கொஞ்சம் சேர்ந்திருக்கலாம்ன்னு வலைபட்சி சொல்லுது...

RVS said...

@”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நிறைய விஷயங்கள் இதுபோல இருக்கு. பக்கத்திலேயே இருக்கும் மாமா அத்தையை பார்க்க முடியாமல் இருக்கும்... ஊருக்கு பொய் ஒண்ணு விட்ட அத்தை சித்தப்பாவை பார்த்து வருவோம். ரைட்டுதான். ;-)

RVS said...

@ஆதிரா
அதே லைன்ல ஃபிகர் வெட்டிக்கொண்டு இருந்தான்னு எழுதியிருக்கேன் ஆதிரா! மீறிப் பார்த்து ஏமாந்தா நானா பொறுப்பு. அதோட மட்டுமல்லாமல் பின்குறிப்பு வேற போட்ருக்கேன். இன்னும் நான் என்ன செய்ய.. பாட்டில்லாம பதிவா.. ஹி..ஹி.. நோ வே ;-) ;-)

RVS said...

@பத்மநாபன்
ஹை.. இங்க பார்ரா.. பத்துஜியோட வலைபட்சியை. உங்க வலைபட்சி ரொம்ப மோசமானது. ஏன் இப்படி கண்டதும் கடையதையும் நினைக்குது. தங்கமணிகள் விஷயத்தில் நீங்களும் நானும் ஒண்ணுன்னு நாம அலைபேசும்போது ஆத்மார்த்தமா ஒத்துக்கிட்டோம்ன்னு நினைக்கறேன். இதெல்லாம் பப்ளிக் பிளேஸ். சரியா.. நாம தனியா பேசுவோம். ஓ.கே ;)))))))
(அப்பாடி... ஆளைத் தூக்கி உள்ள போட்டாச்சு.. ஜாமீன்ல எடுக்க மோகன்ஜி கிடையாது.. மலை ஏறிடிச்சு சாமி.. அப்பாஜியை பார்த்துக்கலாம்..)

பத்மநாபன் said...

//சிமிமாப்பாட்டைப் போட்டு // இந்த தீ.வி.பி தலைப்பில்லாமல் கூட பதிவு போடுவார் ...பாட்டு இல்லாமல் ... என்னங்க ஆதிரா நிங்க ...

பெருமாள் பதிவுங்கறதுனால அதோட விட்டுட்டாரு ..இல்லாட்டி ... தக்குடுக்கு பிடிக்கும்..தக்குடுக்கு பிடிக்கும் அப்படின்னு சொல்லிட்டே சொந்த ரசனைகளை இறக்கித் தள்ளியிருப்பார்..

காலாய்ச்சு நாளாச்சு மச்சி, அதான் ,,,,

Aathira mullai said...

ஏமாந்த அதிர்ச்சியில பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் போய் விட்டேன்.. சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்..

ஆனா இப்பவும் ஒன்னும் சொல்லப்போறது இல்ல.. ஆமா இப்படி பதிவைப் போட்டு அசத்தினீங்கன்னா எப்படி..!!!

சொல்ல முடியல.. மெளனமாக..

Aathira mullai said...

சரியாச் சொன்னீங்க பதம்நாபன் சார். அவரு பக்கத்து எலைக்குப் பாயாசம் கேட்டே சமாளிச்சுடுவாரு.

அதைத் தான் நாக்குக்கு மோட்சத்திலயே கண்டுபிடிச்சிட்டோம்ல..

யாரெல்லாம் சினிமா பாட்டு கேக்கலையோ அவர்களுக்கெல்லாம் மோட்சம் கொடுக்காதே...பெருமாளேன்னு அடுத்த பதிவு போடப் போறாரு..

தக்குடு said...

பெருமாள்தான் நல்ல புத்தியை தரனும்...:) ( நான் என்ன சொன்னேன்)

//அப்பாடி... ஆளைத் தூக்கி உள்ள போட்டாச்சு.. ஜாமீன்ல எடுக்க மோகன்ஜி கிடையாது.. மலை ஏறிடிச்சு சாமி.. அப்பாஜியை பார்த்துக்கலாம்// எல்லாம் ரைட்டு தக்குடுவை எப்பிடி சமாளிப்பேள்?..:P

தக்குடு said...

//தக்குடுக்கு பிடிக்கும்..தக்குடுக்கு பிடிக்கும் அப்படின்னு சொல்லிட்டே சொந்த ரசனைகளை இறக்கித் தள்ளியிருப்பார்..//

கரெக்டா சொன்னேள் பத்துஜி! மெட்ராஸ்ல பெஞ்ச மழைக்கு மேல இவரோட ஜொள்ளாறு பெருக்கெடுத்து ஓடும், கடைசில பழி மட்டும் சம்பந்தமே இல்லாத இந்த தக்குடு மேல...;P

தேவன் மாயம் said...

அழகிய அருள் நடை! தொடருங்க!

RVS said...

ஆதிரா, பத்துஜி, தக்குடு கொடுக்கு வெயிட்..வெயிட்.. கொஞ்சம் ஞாயித்துக்கிழமை வீட்டுவேலைல மூழ்கிட்டேன். கார் அலம்பனும், சாக்கடை குத்தனும், புக் செல்ஃப் அடுக்கனும் எவ்ளோ வேலை.. ஷண்முகி மாமி மாதிரி அவ்ளோ வேலை.
கொஞ்சம் அசந்தா ஆளைக் காலி பண்ணிடுவீங்களே! தக்குடுக்கு ஒரு சிலுக்கு பாட்டு போட்டுட்டா போரும். தொறந்த வாய் மூடாம ஆல் புலன்கள் அடங்கி சமத்தா ஓரமா சாஞ்சிடும். நித்யஸ்ரீ சில்க் புடவை கட்டிக்கறதுனாலத் தான் அவாளையும் தக்குடுக்கு பிடிக்கும் என்கிற விஷயம் உங்களுக்கு தெரியுமா பத்துஜி. ;-)
@ஆதிரா
கானா கேக்காத காது ஒரு கே.காது. சொர்க்கத்தின் வாசல் படி என்று எழுதியதும் அரை கண நேரத்தில் ந்யுரான்களில் உதித்த பாடல் அது. நீங்க எல்லாருமே ரசிச்சுர்ப்பீங்கன்னு தெரியும்.. சும்மா என்னை கலாய்க்கறீங்க.. சரியா.. ;-) ;-)
@பத்துஜி
தக்குடுவோட பல்ஸ் நல்லா தெரிஞ்சவன் இந்த தீ.வி.பி. கரெக்க்டா சொன்னீங்க.. பாடல் இல்லாத பதிவா.... நம்மால முடியாது சாமி.. பாடல் போடக்கூடாதுன்னு பல பதிவுல கையை கட்டிக்குறேன் ஆனாலும் முடியலை.. ;-)

RVS said...

@தேவன் மாயம்
நன்றி டாக்டர் ;-) அடிக்கடி வர மாட்டேங்கறீங்களே.. ;-)

வெங்கட் நாகராஜ் said...

சுவாரசியமான சொர்க்க வாசல். நகைச்சுவை ததும்ப ததும்ப இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

RVS said...

@வெங்கட் நாகராஜ்
பாராட்டுக்கு நன்றி தலைநகரத் தல. ;-)

R. Gopi said...

super

சாய்ராம் கோபாலன் said...

ஆர்.வி.எஸ். நானும் முதல் முறையாக இந்த ஊருக்கு வந்த பிறகு என் தாய் / தந்தை புண்ணியத்தில் இந்த வருடம் நிர்மல்ய தரிசனம் முதல், சமீப தரிசனம் மற்றும் சொர்க்கவாசல் என்று ஒரே பக்திமான் ஆகிவிட்டேன். நியூஜெர்சி Bridgewater வெங்கடேஸ்வர கோவிலில் இதுவே முதல் வருடம்.

ஒரு முறை ஐயப்ப மாலை அணிந்து போமொனோ (Pomono) நியூயார்க் நகரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் அதிகபடியான SNOW வில் சுவாமிக்கு குடை துக்கி கால் பிண்ணிவிட்டது. மைனஸ் பதினைது / இருபது செல்சியஸ் கிழ் இருக்கும் ! கால் போத்தல் ஆனது தான் பாக்கி.

RVS said...

@Gopi Ramamoorthy
Thanks Gopi

RVS said...

@சாய்
ஹி ஹி... நான் சிறுவயது முதற்க்கொண்டே மான் தான். ;-)

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails