Saturday, May 8, 2010

என்னத்த பண்ணி.. என்னத்த செஞ்சி..

இந்தப் பதிவின் தலைப்பு போன்று பல "என்னத்த" கண்ணையாக்களை அலுவலில், வீட்டு வாசலில், பல்பொருள் அங்காடியில், பஸ் ஸ்டாப்பில், பூங்காவில் மற்றும் பல இடங்களில் தங்கள் வாழ்வில் பலர் சந்தித்திருக்கலாம். எந்த ஒரு புது விஷயத்தையும்/முயற்ச்சியையும் (வேலை சம்பந்தமா, குறிப்பா அலுவலக வேலை சம்பந்தமா)  ஆரம்பிக்கும் போதே  அபசகுனமாக முடியாது என்றுதான் சொல்லுவார்கள். "முக்காலிக்கு நாலாவது கால் இருந்தா தேவலாம்", "நாங்கெல்லாம் அப்ப வேலை பார்க்கும்போது..." என்று ஏதாவது ஊன(நொண்டி?) சாக்கு சொல்லிகொண்டே இருப்பார்கள். சில பேர் "இல்ல... நான் என்ன சொல்றேன்னா..." அப்படின்னு "இல்ல.."ன்னு ஒரு பிள்ளையார் சுழி போட்டு தான் முதல்ல பேசவே ஆரம்பிப்பார்கள். சில அறவழி  (அறவழியா (அ) அராஜகமா) போராட்டங்களில் பணியாளர்கள் எல்லாம் உள்ளிருப்பு வேலைநிருத்தம்னு அலுவலகத்துள்ளேயே இருந்து கொண்டு வேலை செய்யாமல் இருப்பார்கள். அரசாங்கம், தனியார் என்று பாகுபாடு இல்லாமல் பாதி அலுவலகங்களில் நிதமுமே வேலை இருக்கும்போதே இதுமாதிரி ஒரு சீட் தேய்க்கிற கும்பல் இருக்கும்.

pull


மேலே இருக்கும் படத்தில் இருப்பது போல கட்டி இழுத்தாலும் வரவே வர மாட்டார்கள். இப்படி பொதுவா முடியாதுன்னு என்னவெல்லாம் சொல்வாங்கன்னு ரூம் போடாம அனுபவத்தில் கிடைத்த சில காரணங்களை கீழே பட்டியலிட்டிருக்கிறேன். காரணங்கள் சிகப்பில், நம்முடைய கமெண்டுகள் பச்சை வண்ணத்தில். இப்ப நா என்ன சொல்றேன்னா.. அட நிப்பாட்டுப்பா.. 

1. நான் எல்லாம் பண்ண ரெடியா இருக்கேன். ஆனா...
 எல்லாம் பண்ண ரெடியா இருந்தா அப்புறம் அந்த 'அ'னா, 'ஆ'வன்னால்லாம் எதுக்கு
2. இதுக்கு முன்னாடி நம்ம இதுமாதிரி செஞ்சதில்லையே...
 செத்தாதான் சுடுகாடு தெரியும்ன்னு சொல்லுவாங்க... எல்லாத்தையும்  முத மொதல்ல  செய்யும்போது அந்த வேலைக்கு அதுதான் முதல் தடவை.. புரியுற மாதிரி சொல்லிருக்கேன்னு நினைக்கிறேன்.
3. இது பார்க்க நல்லாயிருக்கு ஆனா வேலைக்காகுமா
 வேலைக்காகுமா இல்லையான்னு வேலை செய்து பார்த்தாதானே தெரியும்.
4. யாராவது நல்லா சொல்லிகொடுத்தா செய்யலாம் 
சொல்லி கொடுத்தப்பறம் நல்லா சொல்லி கொடுக்கலைன்னு சொல்லிடலாம்..
5. இதை இதுக்கு முன்னாடி யாரோ செஞ்சு குப்புற கவுந்துட்டாங்கலாமே.. 
நாம நிமிரமாட்டோமா என்ன? 
6. அய்யய்யோ.. இதுக்கு நிறைய மூளையை செலவு செய்யணுமே... 
சார். அப்ப அப்ப கொஞ்சம் செலவு செஞ்சாதான்  வரவு இருக்கும்
7. இதெல்லாம் ஹிட் ஆகும்ன்னு எனக்கு தோணலை...
இவரு பெரிய எக்ஸ்பெர்ட்டு.. எது ஹிட் ஆகும் ஆகாதுன்னு  முன்னாடியே தெரியும்.
8. இதை செய்யறத்துக்கான டூல்ஸ் நம்ம கிட்ட இல்லை....
டூல்ஸ் கொடுத்தா சூழ்நிலை சரியில்லை, சுற்றுப்புறம் சரியில்லை..ஏதாவது சொல்லிகிட்டே இருக்கலாம்...
9. ரொம்ப குழப்பமாயிருக்கே...செய்யலாமா.... 
இப்படி பார்த்தா நம்ம நாட்டில எதையுமே செய்ய முடியாது. கடன் வாங்கறத்துக்கு ஐம்பது இடத்துல கையெழுத்து போடறீங்களே... படிச்சா குழப்பமா இருக்கும்..கடன் வாங்காம இருக்கோமா? அட அத விடுங்க... நித்தி ஆசரமத்தில சேரும் போது செக்ஸ் உண்டுன்னு கையெழுத்து வாங்கியிருக்காரம்.. அத்தனை பேரும் படிச்சு பார்த்து தெளிவாதான் 'சேர்ந்'திருக்காங்களா?
10.எங்கிட்ட யாரும் இப்படின்னு சொல்லலையே..
இப்படி இல்லாமா எப்படி சொன்னாலும் செய்யப்போறதில்லை.. அப்புறம் என்ன...
11. இது என்னோட வேலை இல்லையே..
காலை மாலை இருவேளையும் டீ குடிக்கறது, மதியம் கேன்டீன்ல சாப்பிடறது, அதுக்கப்புறம் கொஞ்சமா தூங்கறது, வீட்டுக்கு கிளம்பி போறது இதெல்லாம்தான்  ஆபிஸ்ல முக்கியமான வேலை. 

வேலையே செய்யாமால் இருப்பது ஒரு கும்பல், இருக்கும் வேலையை தள்ளிப் போட்டுக்கொண்டே இருப்பது இன்னொரு கோஷ்டி. இதற்க்கு ஆங்கிலத்தில் procrastination என்பார்கள். இணைய உலாவில் ஒரு சுவாரஸ்யமான வழிமுறை அட்டவணை கிடைத்தது.  இதை வரைந்தவர் நிச்சயமாக ஒன்று இதனால் அவஸ்த்தைப்பட்டிருக்க வேண்டும் அல்லது அனுபவித்திருக்க வேண்டும், அவ்வளவு தத்ரூபமாக கொடுத்திருக்கிறார். அனைவரது கண்ணுக்கும், கருத்துரைக்கும்...
procrastinate

5 comments:

சசிகுமார் said...

நண்பரே கலக்கல் பதிவு சூப்பரா சொல்லி இருக்கீங்க , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

RVS said...

நன்றி சசிகுமார். சொந்த அனுபவம் அரங்கேறும் போது சூப்பரா வருது....

அன்புடன் ஆர்.வி.எஸ்

ஸ்ரீராம். said...

Good one RVS

RVS said...

நன்றி ஸ்ரீராம்.

அன்புடன் ஆர்.வி.எஸ்

Anonymous said...

Sir.. RVS SIR.. where is your leg sir.. where are your shoes?

Shekar

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails