- "அப்புறம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" என்ற உலகளாவிய சம்பாஷனை தொடங்கும் கேள்விக்கு பதிலளிக்க
- "எங்க ஊட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாரு" அப்படின்னு சொல்லிக்கறதுக்கு
- இலவச வெண்டிங் மெஷின் காபி, கிறுக்கும் நோட்டு, கவர், ஸ்டேப்ளர், பேனா, பென்சில், பிரிண்ட்அவுட் மற்றும் இன்னபிறவைகளுக்காக
- ஆபிசிலிருக்கும் கண் கவர் கந்தர்வக் கன்னிகளை பார்ப்பதற்கு
- அப்பா அம்மா மனையாளிடம் இருந்து தப்பித்து விழுந்தடித்து ஓடிவந்து அடைக்கலம் புகுவதற்கு
- இல்வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களுக்கிடையில் ஜாலியான பொழுதுகளுக்காக
- வேலை இல்லாமல் வீட்டு திண்ணையில் படுத்து இருந்தால் துட்டு கிடைக்காது என்பதற்காக
- ஒண்டிக்கட்டையாக ஊட்டுல இருந்தா பேய், பிசாசு, யட்சிணி வந்து பிடிச்சிக்கும் என்று பயப்பட்டுகிட்டு
- வீட்டுல இருக்கிற நம்மளோட மொக்கையான ஸ்டோர் ரூம் மாதிரி இருக்கிற அறையைவிட ஆபிசில் குப்பை கொட்டும் ஏ.சி போட்ட இடம் தேவலாம்ன்னு
- "ஐயோ எனக்கு நிறைய வேலை இருக்கு நாம அப்புறம் பேசலாமா? " அப்படின்னு அறுவைத் திலகங்களிடம் இருந்து தப்பிப்பதற்கு
- பகல் நேர தொலைக்காட்சி சீரியல்கள் அசுவாரஸ்யமாக பிளேடு போடுவதால்
- வேலையற்ற வெட்டி வீணர்கள் மத்தியில் தோன்றிற் புகழோடு தோன்றுவதற்கா
- காலணா பொறாத விஷயத்துக்கெல்லாம் மீட்டிங் போட்டு டீ பிஸ்கட் சாப்பிடுவதற்கு
- புதுசா யாராவது உள்ளாடையாக ஒரு பூப்போட்ட ஜட்டி வாங்கி போட்டுக்கிட்டு வந்தாலும் ட்ரீட் கேட்டு வாங்கி ஓசில சாப்பிடறத்துகாக
- ஃப்ரீயா இருக்கிற ரோட்டை வண்டி ஓட்டத் தெரியாம எடுத்துட்டு வந்து மாப்பிள்ளை அழைப்பு கார் மாதிரி ஓட்டி ட்ராபிக் ஜாம் பண்றதுக்கு
- ஆபிஸ் விட்டதும் சட்டுபுட்டுன்னு நேரா வீட்டுக்கு போகாம பொண்டாட்டியிடம் அடி வாங்க பயந்து நடு ரோடில் நாற்பதுக்கும் கீழே காரை நடைவண்டியாக்கி ஓட்டி வீட்டுக்கு சீக்கிரம் போய் மனைவி மக்களை பார்க்க ஆசைப்படும் புள்ளகுட்டிகாரங்களையும் நடு ரோட்டில் நிற்க வைக்க
- கடைசியாக ஒரு வேலையும் செய்யாமல் இருப்பதற்காக
Friday, June 18, 2010
வெட்டிமுறிக்க பதினேழு காரணங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
பகிர்வுக்கு நன்றி
இதுக்கு மேல இப்ப முடியலை... முடிஞ்சா அப்புறமா... இன்னும் விரிவா... ஒ.கே
/////
//
இன்னுமா?
5,14,16 காரணங்கள் அருமை ...
அம்புட்டுதானா.. இல்லை இன்னும் இருக்கா ?
Post a Comment