Sunday, October 22, 2017

மணியான மஹாபாரதம்

இரண்டு நாட்களாக ஒரு விபரீத ஆசை. இரண்டு மூன்று மணி நேரங்கள் ட்ராஃபிக் ஜாம் ஆகி... நட்ட நடு ரோட்டில் அப்படியே அசையாமல் நிற்க மாட்டோமா என்று இருக்கிறது. இதற்குக் காரணம், சேப்பாயியில் இரண்டு நாட்களாக மகாபாரதப் பிரவசனம் நடக்கிறது. ஸ்ரீஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி அண்ணா, திருமுருக கிருபானந்தவாரியார், புலவர் கீரன், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் என்று பெரியோர்களின் பக்திரசம், தமிழமுதம் சொட்டும் சொற்பொழிவுகளைக் கேட்டிருந்தாலும், இவரது பேச்சு தனி ஸ்டைல். கதையோடு சேர்த்து நாட்டுப்பற்றையும் குழைத்துப் புகட்டுகிறார்.
"Hyderabad, Ahmadabad... என்று முடியும் ஊர்களின் பெயர் ஆங்கிலேயர்களால் வைக்கப்பட்டது. அதனாலதான் எல்லாமே “bad"ல்தான் முடியுதுன்னு ஊரன் அடிகள் சொல்லுவார். ஹைதராபாத்தோட ஒரிஜினல் பேர் பாக்யாநகர்.. அதுமாதிரி அஹமதாபாத்தோட பேரு கர்ணாவதி. அதெல்லாம் எதுக்கு... இப்ப உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்கேனே இந்த ஊரு பேரு வாலாஜாபாத். ஆர்காடு நவாப் காலத்தில வச்ச பேர். ஆனா இதோட பேரு அகஸ்தீஸ்வரம். வெள்ளக்காரன் வச்சுட்டுப் போனதை அப்படியே சத்தியமாக் காப்பாத்தறோம்.
”எல்லைகளைப் பிரிச்சான் ஒரு ஆங்கிலேயன். ராட்க்ளிஃப்னு பேரு. லாஹூர்ல இந்துக்கள் ஜாஸ்தி. ஆரிய சமாஜம் தோன்றிய இடம். அதை பாகிஸ்தானுக்குக் கொடுத்துட்டான். ஹிந்துகள் அதிகம் வாழ்ந்த ஊர். பிரிச்சப்புறம் லட்சக்கணக்கான ஹிந்துக்களைக் கொன்று குவிச்சாங்க... இது மாதிரி இல்லாம... பாண்டவர்களோட காண்டவபிரஸ்தத்துக்கும் அஸ்தினாபுரத்தும் எல்லைகளை நாம வகுத்துக்கணும்னு துரியோதனன்...”
“பாண்டு பசங்களுக்குக் கொடுக்காம தன்னோட பசங்களுக்கே நாட்டை ஆள்றத்துக்கு பட்டாபிஷேகம் பண்ணிடலாம்னு நெனைச்சான் திருதிராஷ்டிரன். இருந்தாலும் விதுரனைக் கூப்பிட்டு.. துரியோதனனுக்கு பட்டாபிஷேகம் பண்ணலாம்னா நம்ம தேசத்து மக்கள் என்ன நினைப்பார்கள்? என்று கேட்டான். அது முடியாட்சி. மன்னராட்சி. அப்பவே மக்கள் அபிப்ராயம் கேட்டுதான் பெரிய முடிவுகளை எடுத்தாங்க.. ஆலோசனை பண்ணினாங்க.. ஆனா இப்போ குடியாட்சி. ஓட்டுப் போட்ட மக்களைக் கேட்காமலேயே அவனுங்களா நாலு பேர் சேர்ந்து தீர்மானம் போட்டுடறாங்க...”
இதுபோல உரை முழுக்க ’வறுத்த’ முந்திரிகள் ஜாஸ்தி.
ஓ! பிரவசனம் பண்றவர் பேரு தானே? ஆர்.பி.வி.எஸ். மணியன்.. Rbvs Manian அவரோட நரைச்ச முறுக்கு மீசைக்கும்.... பட்டையாய் நீறு பூசிய நெற்றியும்.. கணீர்னு இருக்கும் தாய்மொழி உச்சரிப்பும்.... ஆஹா.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails