Sunday, October 22, 2017

கிருபாநிதிஸ்


சேப்பாயி மாயவரம் தாண்டியதும் சங்கீதா....
”இனிமே மன்னார்குடி போயிட்டு வரதாயிருந்தா... அரைமணி கூட ஆகும்...”
“ஏன்?”
“மாயவரத்துல நம்ம டாக்டர் ஃப்ரெண்ட்டை பார்க்காம வண்டி நவுருமா?”
“யெஸ்... அதென்ன அரைமணி... ஒரு மணி கூட ஆகலாம்.. சில சமயம் மூணு மணி நேரம் கூட ஆகலாம்... லவ்லி டாக்டர்”
சிலரைப் பார்த்தவுடனே மனசு பச்சென்று இறுக்கமாக ஒட்டிக்கொள்ளும். டாக்டர் கிருபாநிதி.... பெயரிலேயே கிருபையையும் நிதியையும் ஒட்ட வைத்திருக்கும் டாக்டர். Orthodontist. எண்பதுகளின் ஹீரோக்களுக்கு கொஞ்சமாக வயசான மாதிரியான தோற்றம். வெள்ளைக் கோட்டில்லாமல் ரோடில் கைலியோடு எதிரே நடந்து வந்தால் கூட டாக்டர் என எளிதில் அடையாளம் சொல்லிவிடலாம்.
டாக்டர் வித்யா கிருபாநிதி மன்னையில் என்னுடைய அக்காவின் பள்ளி க்ளாஸ்மேட்டாம். மன்னார்குடி சம்பந்தமில்லாமல் ஈரேழு புவனங்களிலும் ஆள் இருக்க முடியாது என்பது திண்ணமாயிற்று. "எங்கம்மா படிச்சது மாயவரத்துலதான்... பட்டமங்கலத்தெருவுலதான் இருந்தா..." என்று என் பங்கிற்கு மாயவரத்தையும் கட்டி இணைத்தேன்.
"நீ Braces போட்டுக்கணும்... எங்க பார்வைக்கு பல்லுதான் முதல்லபடும்.." என்று பெரியவளிடம் சொன்னபோது டாக்டர் வித்யா "தொழில்காரவங்களுக்கு அது சம்பந்தப்பட்டதுதான் பிரதானமா கண்ல படும்..." என்றார். "தாங்க்ஸ்... நானும் ரொம்ப நாளா சொல்லிண்டிருக்கேன்..." என்று அகமகிழ்ந்தாள் பெரியவள்.
தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு பண்ண முற்பட்ட டாக்டர் தம்பதியிடம் கும்பகோணத்தில் வயிற்றைக் கவனித்துவிட்டோம் என்று கெஞ்சி... ஜில்லென்று "சரசபரில்லா" குடித்தோம்.
”சார்... ஹீரோ கணக்கா இருக்காரு...”
“பானுப்பிரியா ஹீரோயினா நடிக்கற ஒரு படத்துல கமிட் ஆகியிருப்பேன்...” என்று நாயகப் புன்னகை புரிந்தார். அப்போது டாக்டர் வித்யாவும் பெருமிதமான புன்னகையில் அரசியானார்.
”ஏன்...நீங்க இப்ப கூட நடிக்கலாம்....”
“அப்பா வேஷத்துக்கா?”
“இல்ல சார்... அண்ணா வேஷத்துக்கு.....”
ஃபேஸ்புக்கில் துவங்கி... மொபைலில் வளர்ந்து... சென்னையில் ரங்கநாதன் கணேஷ் அண்ணா வீட்டு திருமணத்தில் பார்த்து... மாயவரத்தில் அணுக்கமாயிருக்கிறோம்.

0 comments:

ஆடிய பிற ஆட்டங்கள்

Related Posts with Thumbnails